பெண் என்னும் பெரும் சக்தி

பெண்ணே...!
உன் சக்தி பெரிதானது !

அதை அறியாமல்
உன்னைப்
பேதை என்று சொல்வதுவோ
புதிரானது!

நீ ...
பொறுமையில் பூமி !
புறப்பட்டால் புயல் ...!

நீ...
புன்னகைப் பூ !
போராடும் தீ !

நீ...
அன்பின் மழை !
அஞ்சாத மலை ...!

உனக்குள்ளும்
வீரம் உண்டு ...!
உலராத
ஈரம் உண்டு...!

அன்று
அடுப்பங்கரைக்கும்
ஆற்றங்கரைக்கும்
அலைந்த நீ...

இன்று
அயல் நாட்டிற்கும்
ஆகாயத்திற்கும்
பயணிக்கின்றாய்!

நாளை
இவ்வுலகையே
மாற்றியமைக்கும்
பெண் என்னும் பெரும் சக்தி
உன்னிடம் உள்ளது!

எழுதியவர் : தன்முகநம்பி (18-Feb-15, 9:30 pm)
பார்வை : 2889

சிறந்த கவிதைகள்

மேலே