பெண்ணே புறப்படு

புறப்படு பெண்ணே புறப்படு ...!
புயலாய் நீயும் புறப்படு...!
புதிய சகாப்தம் படைத்திடு !

இத்தனைக் காலம் ...
இருளில் கிடந்து - வீணாய்த்
தவித்தது போதும் புறப்படு !

எதிலும் உன்னால்
சாதிக்க முடியும் - என்றே
எழுந்து நீயும் புறப்படு !

அஞ்சிக் கிடந்து ...
அடங்கி நடந்து - தினம்
அழுதது போதும் புறப்படு!

குடும்பம் காக்க ...
குலத்தைக் காக்க - பெரும்
கொடுமை மாய்க்கப் புறப்படு!

பெண்ணாய்ப் பிறந்தால்
பேதையென் றிகழும் - கொடிய
எண்ணம் மாய்க்கப் புறப்படு !

மடமை ஒழித்து
மாண்பை விதைத்து - உயர்
கடமை ஆற்றப் புறப்படு !

வேதனை விலக
வேற்றுமை அகல - புதிய
விடியல் தோன்றப் புறப்படு!

எழுதியவர் : தன்முகநம்பி (18-Feb-15, 9:15 pm)
பார்வை : 385

மேலே