ஆற்றாமையிலும் மகள் தந்த மகிழ்ச்சி

ஆற்றாமை வந்து
அடுக்களையை மகளுக்குத் தந்தேன்
மனம் மட்டும் மகளிடமே
ஒரு வேளை உணவை
மகளைச் செய்யச் சொன்னவள்
நொடிக்கு நூறுமுறை அறிவுரையும்
நிமிடத்திற்கு நூறுமுறை செய்முறையும் சொல்கின்றேன்
தாளாத மனம்
தள்ளாமை என்னடி
மகளுக்கு சூடு பட்டுவிடுமோ
அடுப்பே பற்ற வைக்காதவளாயிற்றே
பரபரக்கிறது பதைபதைக்கிறது
இறுதியில் இருவருமே சேர்ந்து சமைத்தோம்
அங்கே சுவையிருந்ததோ இல்லையோ
அன்பு அதிகமாயிருந்தது
காரம் இருந்ததோ இல்லையோ
கரிசனம் நிறைய இருந்தது
உப்பு அதிகமோ இல்லை குறைவோ
உள்ளங்கள் சரிவிகிதத்தில்
ஒன்று புரிந்தது
பாசமான பந்தங்கள் எதுவாயினும்
பகிர்ந்து வேலை செய்தால்
சலிப்பும் தெரியாது
சந்தோஷத்திற்கும் குறைவிருக்காது
உன்னோடு சமைத்தலில்
ஆற்றாமை கூட மகிழ்ச்சி தானடி மகளே

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (18-Feb-15, 8:13 pm)
பார்வை : 88

மேலே