--------ஓர் கப் காபி----------

தூக்கத்தில் இருந்து விழிப்பு வந்தவுடன்
மதி மயக்கம் கொள்ளுகிறது
மனமோ, ஆவி பரக்க அம்மா எடுத்துவரும்
காபியை தேடும்...!

மேகம் போன்று நுரை தழும்பி,
வானவில் தவறவிட்ட ஓர் நிறம் உடுத்தி,
சுவாசிக்க மறக்கச்செய்யும் வாசனை பரப்பி
கண்டதும் கேட்க தோனும்
இன்னொரு கப் காபி என்று..!

குளித்து முடித்து அலுவலகம் செல்லும் முன்
ஏதோ ஒன்றை மறந்தமோ என்றாற் போல் உணர்வு
எல்லாம் சரியாக இருந்தாலும்
ஒன்று குறைவதாற்போல் உணர்வு...அது
தெரு முனையில் மணி அண்ணன் கையால் ஓர் காபி..

வட்டம் வைத்த டம்பளரில்
இனிப்பு சற்று தூக்கலாக இட்டு,
தழும்ப தழும்ப தருவர்
பருகி குடிக்கும் போது
உலகமே மறக்கும் அளவுக்கு சுவை

இப்படி அப்படி என்று வேலைக்கு வந்த பின்
நண்பன் அழைப்பான் "வாடா ஓர் கப் காபி" என்று
மறுபேச்சின்றி காதலியை பார்க்க சொல்வது போல்
காபி மிஷன் முன் நின்று,

தேவைக்கு ஏற்றாற் போல் டிக்கசன்
அளவுக்கு தகுந்தாற் போல் சுகர் கரைத்து
வெண்பாலை கலந்து...இதமாக சூடேற்றி
உரையாடிக்கொண்டு அருந்துவது..-தனி சுகம்..!

தினம் இதுவும் அன்றாடம் ஆகி போனது
அவசியமாய் மனது ஏற்றுக்கொண்டது
கிடைக்கும் போதுயில்லாம் எடுத்துக்கொண்டேன்
ரூசியிலும் வாசனையிலும் கலந்துப்போனேன்

வாருங்கள் நேரம் கிடைக்கும் போதுயில்லாம்
ஓர் கப் காபி அருந்திக்கொண்டே பேசுவோம்...!

ஃதங்கம்

எழுதியவர் : தங்கமாரியப்பன் (19-Feb-15, 10:25 am)
பார்வை : 105

மேலே