கல்வி சுமை அல்ல சுகம் தான்
மனிதா...!
துள்ளி செல்லும் வயதில் துள்ளி செல்...!
"தன்னம்பிக்கை" என்னும் தைரியம் இருந்தால் " நீ "தள்ளாடும் வயதிலும் துள்ளி செல்ல முடியும்...!
கல்வி சுமை என்று நினைத்துக் கொள்வதை விட சுகம் என்று நினைத்து கொண்டால் இலக்கினை வெல்வாய்...!
கல்வி என்னும் குழியில் விழுந்து விட்டேன் என்று நினைப்பதை விட அக்குழியிலிருந்து தன்னை எவ்வாறு தேற்றுவது என்று நினைத்தால் கல்வியும் சுகம் தான்...!
முயற்சி என்னும் படகில் அமர்ந்து கொள்...!
"தன்னம்பிக்கை" என்னும் துடுப்பை அசைத்து கொள்...!
உன்னால் இமயத்தை அடைய முடியும்...!
அது போல்,...
ஒருவனின் விடா முயற்சியும்,அவனின் லட்சியமும் இருந்தால் சிகரத்தில் ஏறி செல்ல முடியும்...!
முயற்சியின்றி கிடைக்கும் வெற்றிக்கு என்றும் பயனில்லை...!
மனிதா...!
முயற்சி கொள்...!
தன்னம்பிக்கை என்னும் தைரியத்தை வளர்த்து கொள்...!
நிச்சயம் உன்னால் சிகரத்தை வெல்ல முடியும்...!
கல்வி சுகமே...!