அழுகைக்கண்ணீர் துடைத்து
அம்மா என்பவள் ஓர் தேவதை.
நான் விழித்ததும்
என் கண் முன்னே நிற்பவள், பாலுட்டுபவள், சோறூட்டுபவள் என்றே எண்ணி இருந்தேன்
நான் பிறந்த 60 மாதங்கள் வரை.
ஓர் சாயங்கால வேளையில்
நான் என் வீட்டு கதவை உருட்டி விளையாடிக் கொண்டிருக்க தன்னை அறியாமல் அவள் மூடிய கதவு என் கை விரல்களை நசுக்கியது.
நான் அழத்தொடங்கினேன் என் அழுகைக்கண்ணீர் துடைத்து
அவள் அழத்தொடங்கினாள் அன்று எனக்கு புரிந்தது அம்மா என்பவள் உயிர் கொடுத்தவள் எனக்கென மறுபடியும் உயிர் கொடுக்கவும் செய்வாள் என்று.