பதில் இல்லையே

ஆசைகளைக்
கேள்விகளாக்கி
வாழ்க்கையிடம்
பதில் தேடி..
தேடி..
தேடி..
தேடியபடியே .
.அது சொல்லும்
பதில்களை ஏற்காமலே
வாழ்க்கையையே
கேள்விக்குறியாக்கும்
ஆச்சரியக்குறி ..
மனிதமனம் !

எழுதியவர் : கருணா (19-Feb-15, 10:13 pm)
பார்வை : 120

மேலே