அக்னிக்குஞ்சுகள் 0o0 குமரேசன் கிருஷ்ணன் 0o0
பாரதி மெல்ல கரம் பற்றினான்
பாதம் தொட்டு பின் சென்றேன்
அதுவொரு அடர்ந்த காடு
அங்கொரு பொந்திடை
""அக்னிக்குஞ்சுகள் தகதகத்தன ""
அள்ளியெடுத்து என்னிடமளித்தான்
அவ்வளவும் அத்தனைச் சூடு ..!
அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்
அசுரக்காற்றொன்று
அள்ளியெனையிழுக்க
அதன்வழி பயணித்தேன்
சட்டெனவொரு பொறி
செல்லுமிடமெங்கும் தூவினேன்
சிலர் எடுத்துக்கொண்டனர்
சிலர் அணைக்க விழைந்தனர்
ஆனாலும் ...
என்னிடம் கொஞ்சம்
மிச்சமிருந்தது ...?
--------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்