பொம்மை

நிகிக்கு கையில்
டம்ளர் கிடைத்தாயிற்று
முக்காலியில் டம் டம்மென்று
அடிக்க துவங்கிவிட்டான்
நான்லையாகி திக்கெல்லாம்
முட்டி மோதி கொண்டிருந்தேன்

சற்றே இளைப்பாற
டம்ளர் தரையில் மோதலானது
நானும் அலைந்தேன் மிக பலமாய்

நீரை கண்டதும் டம்ளர்
கப்பலாகி மூழ்க துவங்கியது
நானும் ஆழ்கடலில் மூழ்க துவங்க
எத்தனித்தபோது
நிகியின் சிரிப்பில்
பறந்து வந்து ஒட்டிக்கொண்டேன்

நிகி மனம் மாறி பொம்மையை தூக்கினான்
நான் ஒலியிலிருந்து பொம்மையானேன் .

எழுதியவர் : ஜெயந்தி (20-Feb-15, 2:01 pm)
சேர்த்தது : Jayanthi A
Tanglish : pommai
பார்வை : 93

மேலே