வெளிநாட்டு பயணம்

ஒரு ஊரிலே ஒரு வயது வந்த பாட்டனும் பாட்டி யும் மோகன் எனும் இளைஞருடன் வசித்து வந்தார்கள். நான் சொல்லப்போவது உண்மை சம்பவம். யாரும் உங்ககளுக்கும் இப்படி நடந்து விடும் என பயப்பட வேண்டாம். ஆனால், மனத்தை நெருடுகின்ற உண்மைக்கதை. சரி, என்ன நடந்தது என்றால், ஒவ்வொரு நாளும் வேலை செய்து விட்டு குடித்து விட்டு வீட்டுக்கு வந்து சேர்வர் இந்த மோகன் எனும் இளைஞர். தகராறும் செய்வார். நான் வெளிநாட்டுக்கு போகப் போகின்றேன் என்னையும், எனது காசையும் தாருங்கள். நான் எங்காவது போகின்றேன். என்பான். பாட்டியும் ஒரு நாள் தானே இரண்டு நாள் தானே என்று விட்டு கொடுத்து விடுவாள். அந்த பாட்டி க்கு பெயர் பார்வதி. வயது 85. தள்ளாடுற வயதுலயும் குடும்பம் நடத்துதடா இந்த மனிசி. என்று தான் ஊர் மக்கள் பேசிக்கொள்வார்கள்.மெய் தான். குடும்ப நிலையோ அன்றாடம் காச்சிகள். கையிலே பணம் இல்லை. என்ன செய்யலாம்? சரி, பரவாஜில்லை, வெளிநாட்டுக்கே அனுப்பி விடலாம் என்ற முடிவுக்கு வந்தவளாய் பார்வதி ஆச்சி சரியடா மோனை வெளிநாடு தானே போகலாம் போ என்றாள். கொழும்புக்கு போய் பாஸ் போர்ட் எடுக்க வேணும் காசு தாணை என்றான் மோகன். சரி, அதுக்கு பிறகு ஒரு மாதிரி வெளிநாடு போய் சேர்ந்தான் மோகன். காசும் அனுப்பி வந்தான் மோகன். கிழவியும் பாட்டுல போட்டுது இனி என்ன செய்யலாம்???
கிழவனும் மேல போட்டுது. இனி யாருக்கு இந்த பணம் வேணும்??? நீங்களே சொல்லுங்கோவன் பாப்பம். இப்பிடியும் ஒரு வாழ்க்கை. இது வேணும் தானே???

எழுதியவர் : puranthara (21-Feb-15, 5:56 pm)
சேர்த்தது : puranthara
Tanglish : velinaattu payanam
பார்வை : 769

மேலே