ஏதுமில்லை உலகில்
ஏதுமில்லை உலகில்...!
எனக்கு -
உயிர்ப்பால்
கொடுத்த தாய் ....!
என் மொழி -
தவிப்பு கண்டு...
என்னில் -
தயைமிக கொண்டு...
புகட்டிய -
தாலாட்டுச்
சொற்ப்பால்...!
இன்பத் தமிழ்பால்...!
என்றும் -
இயல், இசை
கூத்தாய்
இலங்கும்....
இம் -
முப்பாலுக்கு...
அப்பால்
ஏதுமில்லை
உலகில்
ஒப்பால்....!