ஒரு கை பொங்கல் சோரு

கம்மாக் கரை,
கரு வேல மரம்,
கட்ட வண்டி தடம்,
தூரத்தில் எழும்பும் பேருந்து ஒலி,
பக்கத்து ஊர் மைக் செட்டு பாடல்,
ஏழரை மணி சீரியல் பார்க்க சில இளம் பெண்கள்,

அடுப்படியில் அம்மா -
ெநல் அரிசி சோரும் கருவாடு புளிக் குழம்பும் ,

அடுத்த நாள் ஆறு மணிக்கெல்லாம் வயலுக்கு செல்ல காத்திருக்கும் அப்பா,

கோழி அடஞ்சுருச்சா ?
அந்த ரென்டு கண்னு குட்டிய புடிச்சு கட்டியாச்சா ?
பாட்டியின் ஒலி.

யாரோ வராங்க பாரு -
தாத்தாவின் குரல்,
வேலிக்கு அருகில் கட்டி வைத்திருந்த
செல்ல பிராணியின் சப்த்தத்தை கேட்டு...!

ஒன்பது மணிக்கு மேலோ- என்ன ஒரு நிசப்தம்.?
அந்த கரு நிற வண்டின் ஒலியயும், காரிருள் அமானுஷ்யத்தயும் தவிர வேரெதுவும் கேட்கவில்லை..!

அருமையான ஆகாரம்,
அமைதியான இயற்கை காற்று,
இடையயூரில்லா நித்திரை,
என்ன ஒரு உறக்கம் ?
என்ன ஒரு உறக்கம் ?

அதிகாலை சூரியன் என்னை தட்டி எழுப்பியது-
இதமான குயிலோசை,
கரைந்து சென்ற காக்கை கூட்டம்,
இவை யாவற்றிற்கும் முன்னரோ - என் வீட்டு முற்றத்தில் கூவிய சேவல்..!!!

ஒன்பது மணிக்கெல்லாம் அறுவடை முடிந்தது ,
அது முதற் கட்ட அறுவடை- சாங்கியத்திற்காக.....

அதற்குள் என் வீட்டு பெண்கள்
ஊர் கோவில் முன் குவிந்தனர்.

எங்க வீட்டு பானை தான் சீக்கிரம் பொங்கும்,
இல்லை இல்லை எங்க வீட்டு பானை தான் சீக்கிரம் பொங்கும் -
என மார் தட்டிக் கொண்டு,
ஒரே குடும்பமாய் காய்ச்சிய ஊர் பொங்கல்..!

சாமிக்கு கொஞ்சம் படச்சுட்டு,
ஊருல உள்ள சிறு குழந்தைகளுக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்துட்டு,
எனக்கும் ஒரு கை பொங்கல் சோரு குடுத்தா எங்க அம்மா ..!

ஆமாம் - அன்னமிட்ட என் நண்பனின் அம்மா எனக்கும் அம்மா தான ???

உங்க ஊரு பிரியானிய விட,உங்க ஊரு பிட்சா, பர்கர விட,
அந்த ஒரு கை பொங்கல் சோரு ,
அதுக்கு அப்புறம் கிடச்ச நெல்லு சோரு
எனக்கு அமிர்தமே...!!!

மீண்டும் அந்த ஒரு கை பொங்கல் சோற்றிற்காக காத்திருக்கிறேன் -
அடுத்த வருடமாவது கிடைக்குமாமென...!!!

வாய்ப்பிருந்தால் கொண்டாடுங்கள்- பொங்கலை ஒரு கிராமத்திற்கு சென்று..!

அன்புடன் அமல்..!!!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பிரசாத் அமல் ராஜ் . ஜோ (21-Feb-15, 11:57 pm)
பார்வை : 110

மேலே