சிரிங்க கொஞ்சம் சிரிங்க
நகைச்சுவை-1
டாக்டர்:உனக்குப் பார்த்த சிகிச்சைக்குத்
தாத்தாவிடம் பணம் வாங்கிக்கச்
சொல்றயே?ஏன்?
நோயாளி:நீங்கதானே டாக்டர் பரம்பரை
நோய் என்றீர்கள்.
நகைச்சுவை-2
ஒருத்தி-உன்னிடம் 66 புடவைகள் இருக்குன்னு
சொல்ற...மூணு புடவையைத்தானே
மாற்றி மாற்றி கட்டுற...?
மற்றவள்:ஆமாடி....6+6=12,1+2=3 அவ்வளவுதான்
நகைச்சுவை-3
தாத்தா:டேய் குமாரு....உள்ளே ஓடி ஒளிஞ்சுக்கோடா....
அதோ உங்க வாத்தியாரு வர்றாரு....பள்ளிக்கூடம்
போகாம லீவு போட்டுட்டு விளையாடறதைப் பார்த்தா
உன் தோளை உரிச்சுப்புடுவாரு.....!
பேரன்:முதல்ல நீ போய் ஒளிஞ்சுக்கோ தாத்தா.நீ
செத்துட்டதாதான் லீவு சொல்லியிருக்கேன்....?
நகைச்சுவை-4
"ராஜான்னு அடுத்த தெருவுல
ஒரு டாக்டர் இருக்கார்.மோசமான
கண்டிஷன்ல போறவங்களைக்கூட
பிரமாதமா ஆக்கிடுவார்...."
"இந்த டாக்டர் எப்படி....?"
"சின்ன பிரச்சினையோடு போறவங்களைக்கூட
பிரேதமாக்கித்தான் அனுப்புவார்."