காமத்தைச் சிறைவை

பேதையல்ல பெண் !
அவள்
நல்ல பாதை காட்டும்
கண்!

அவள்
குடும்பத்தின்
குத்து விளக்கு!

குமுகாயத்தின்
குல விளக்கு !

நாட்டின்
ஒளி விளக்கு!

அவளைப்
பேதையாய்ப் பார்க்காதே
கற்புள்ள
கண்ணகியாய்ப் பார்!

அவளின்
அழகிய தோற்றத்தைப்
பார்க்காதே!
அன்பான உள்ளத்தைப் பார்!

உன்
கண்ணிற்குக்
கடிவாளம் போடு !

காமத்தைச் சிறைவை!

கண்ணியம் கடைபிடி
கட்டுப்பாட்டுடன் நட!

மனத்தை அடக்கு
மானத்தைக் காப்பாற்று !

எழுதியவர் : தன்முகநம்பி (22-Feb-15, 11:25 am)
பார்வை : 285

மேலே