சிந்திப்போம்
திடீருன்னு ஒருத்தர் வழிபாட்டு முடியும் நேரத்தில் ஆலயம் உள்ளே வர ஒரு கூட்டமே உள்ளே வந்தாங்க...! ஆலயத்தின் வழிபாடு முடிகிற தருவாயில் வந்து முன் பெஞ்சில் உள்ளவர்களை கூட வந்தவர் எழுப்பிவிட அதுல உட்கார்ந்தாங்க..! பின்னாடியே போட்டோக்ராபர், தொலைகாட்சி காரங்க வந்தாங்க.. ஸ்டில் மற்றும் படம் பிடிச்சாங்க..!
வெளியில திடீர்னு ரெண்டு பெஞ்சபோட்டு வெஜிடபிள் பிரியாணி பொட்டலம் தண்ணி பாக்கெட்டு..வச்சாங்க.. ஒரு 25-50 பிரியாணிக்கு அவங்க ஆளுங்களே ஒரு நூறு பேரு வந்தாங்க..! ஒரு பத்து நிமிஷத்துல மெயின் ஆளும் போல அவங்க கிளம்பிட்டாங்க..!
ஒரே குழப்பம் எனக்கு.. என்னடா நடக்குதுன்னு.? வழிபாடு முடிஞ்சி வெளிய வந்துபார்த்தா மீதி இருந்த துணையாட்கள் பிரியாணி பொட்டலம் கொடுக்க ரெடியாக அதை வாங்க கூட்டம் வரிசையில நிக்குது.. அதை படம்பிக்குமொரு கூட்டம் ஸ்டில் எடுக்க போட்டோக்ராப்பேர் மற்றும் வீடியோ பதிவு சூப்பரா நடந்தது..
இதற்கிடையில் வருடாவருடம் போலியோ சொட்டுமருந்து ஆலய வளாகத்தை ஒரு இடமாக வைத்து போடுவது வழக்கம். இன்னைக்கு அதையும் வொருவர் எஞ்சியிருந்த துணையாட்களிடம் சொல்லிவிட உடனே அங்க பார்வை போக துனையாட்களில் லீடராக உள்ளவர் அங்கேயும் போயிட்டு போலியோ போடுறமாறி ஒரு பதிவு எடுத்திட்டாங்க.. அதுக்கப்புறம் அந்த லீடரும் கிளம்பிட்டாரு..! ஒரே கல்லுல ரெண்டு மாங்கான்னு நம்ம ஆலய உறுப்பினர் ஒருவர் சொல்ல எனக்கு ஒரே குழப்பம்..
சரின்னு அவர்கிட்ட என்னங்கையா ஒரே கூட்டம் , நிறைய கார் என்ன நடக்குதுன்னு கேட்க.. அவர் சொன்னார் பிறந்தநாள் வருதுல அந்த கொண்டாட்டம்னு சொன்னாங்க. அதுசரி... சாமி கும்பிட இடத்துதுலேயுமா..னு? மனசாட்சிய கேள்வி கேட்டுட்டு நிம்மதியா வீட்டுக்கு போலாம்னு கிளம்பினேன்..!..
ஆனா பார்த்த ஒரு நல்ல விஷயம்.. ரெடி, காமெரா, ஆக்ஸன் சொல்லல.. ஒரே சாட்-ல இரண்டு மூணு டேக் ஓகே. பண்ணாங்க...! நான் பார்த்த ஒரு புதுவித ஷூட்டிங்..! கேமராமேன் கொடுத்து வச்சவரு தொல்லையில்ல..! நல்லா இருக்கட்டும் அவங்க குடும்பம்...!
இதற்கிடையில எங்கடா நம்மகிட்ட சொல்லிட்டிருந்த ஒரு நல்ல மனுஷன காணும்னு பார்த்தா அவர்தான் முன்னாடி பிரியாணி வாங்க நிக்கிறாரு..! என்னமோ யோசிக்கிறதுக்குள்ள யோக்கியன் அயோக்கியனாகுறான் கண்ணுக்குள்ள.. எப்படி நம்ம நல்லத விதைக்கிறது; நினைக்கிறது.. நாசமா போச்சு.. நம்ம சிந்தனை... அட போங்கப்பா...! இப்படியே யோசிச்சா நம்மள வேற்று கிரகவாசினு நம் மக்களே சொல்லிடுவானுங்க..! கடவுள்தான் காப்பாத்தனும்..
கடைசில என் மனைவி வெளிய வந்ததுக்கபுறம் தான் தெரிஞ்சது. வந்தது அமைச்சரும் அவங்க ஆளுங்களும்னு.. இப்ப உங்களுக்குமே புரிஞ்சிருக்கும்...! நடக்கட்டும் நடக்கட்டும்..! இதுக்காவது ஜாதி மதம் பாக்காம வராங்கலேனு நெனச்சுக்கிட்டேன்.
இதான் நடந்ததுங்க.. நம்பலைனா பாருங்க விரைவில் நீங்களே காணலாம் டிவியில் ஆலயத்தில் வழிபாடுன்னு செய்தி வரும்.. அப்பவாவது நம்புங்க..!