காதல்
இக்கணம் நீ எனை நினைப்பாயோ! - என்
நினைவலைகளில் நீ மூழ்கி தவிப்பாயோ!
நெஞ்சுருகி கண்ணீர் நீ வடிப்பாயோ! - என்
பிரிவதனை பொறுத்துதான் கிடப்பாயோ!
இத்தனையும் என்னுள்ளே நடக்குதடி!
உள்ளமது எரிமலையாய் கொதிக்குதடி! - உனை
இப்பொழுதே காண மனம் துடிக்குதடி! - ஆனாலும்
இயலாமை எண்ணியது பொறுக்குதடி!
உப்பது பட்ட உடல் காயம் போல
பிரிவு பட்ட மனம் எறிந்துதான் போகுதடி!
இத்தனை தூரத்தில் என் உடல் இருந்தாலும்!
உந்தன் பின்னாலே எந்தன் மனம் சுத்துதடி!
காலமிது கடந்துதான் போகாதோ!
உன் பிரிவு எனை விட்டு பிரியாதோ!
இடை பட்ட தூரமது இக்கணமே குறையாதோ!
உந்தன் விரல் பிடித்து மீத வாழ்வு போகாதோ!