என் உயிர் தோழிக்கு ஓர் கடிதம் 555
தோழியே...
உனக்கு நினைவிருக்கா
நீயும் நானும் சந்தித்து கொண்ட
அந்த முதல் நாள்...
தயங்கி தயங்கி என்னருகில் வந்து
உன் வகுப்பறையை கேட்டாய்...
நானும் கல்லூரிக்கு
புதியவன் என்று தெரியாமலே...
இருவரும் சேர்ந்தே
தேடினோம் வகுப்பறையை...
என் வகுப்பறை வந்துவிடவே
என்னை போக சொன்னாய்...
உன் வகுப்பறையும்
பார்போம் என்றேன்...
புன்னகையுடன்
தலையசைத்தாய்...
கல்லூரியில் நான்
கண்ட முதல் நட்பு...
நாட்கள் சில கடக்க உன்
தோழிகளை எனக்கும்...
என்னையும் அறிமுகம்
செய்தாய்...
மூன்று வருடங்கள்
உருண்டோடியதே தெரியவில்லை...
நமக்குள் ஏற்பட்ட செல்ல
செல்ல சண்டைகள்...
நீ கோபத்தோடு என் மீது தூக்கி
எரியும் உன் கைப்பை...
அதிலிருந்து நான் எடுத்துகொள்ளும்
ரூபாய் தாள்கள்...
உன்னிடம் கொடுக்க
வந்தால்...
என் தலையில்
கொட்டிவிட்டு...
வராதே அப்படியே போய்விடு
என்று திட்டுவதும்...
இப்போது நினைத்தாலும்
மனதுக்குள் ரொம்ப சந்தோசமாக...
நீ வேறு நான் வேறு மதமாக
இருந்தாலும்...
உன் வீட்டு விழாவிலும்
என் வீட்டு விழாவிலும்...
நாம் தவறாமல்
கலந்து கொள்வேம்...
உன் திருமணதிற்கு
நான் வந்தேன் தனியாக...
என் திருமணதிற்கு நீ
வரவேண்டும்...
உன் குடும்பத்துடன்
உன் அன்பு கணவனோடும்,
அழகு மகனோடும்...
ஆயிரம் உறவுகள் எனக்காக
வந்திருந்தாலும்...
உன் வருகைக்காக உன்
நண்பனின் விழிகள்...
வழிமேல் ஏங்கி கொண்டு
இருக்கும்...
என் தோழியே ஒவ்வொரு
வினாடியும்...
உன் வருகையை
எதிர்பார்த்து...
இப்படிக்கு உன் அன்பு
நண்பன் முதல்பூ.....
[என் அன்பு தோழிகளுக்காக].....