கருவாச்சி காதல்
கண்ணுக்குள்ள உம்ம
படம் புடிச்சேன் அதை
பரண் நெஞ்சில் பத்திரமா
ஒளிச்சி வச்சேன்
கல்லாக இருந்த நெஞ்சில்
புல்லாக நீ புடிச்ச
கண்ணால வெடிவச்சு
கன்னி மனம் நீ உடச்ச
கண்ணும் உறங்கிடுச்சி
மழை மண்ணில் தூங்கிடுச்சி
மன்னா மனசுக்குள்ள
நீ மட்டும் தூங்கலையே
கம்மாக்கரையோரம்
கண்பார்த்துப் போரவரே
உங்கம்மா கூட்டிவந்து வந்து
பெண் பார்த்துபோவீரோ
என்னோட பூ கூட
உனைஎட்டி பாக்குதைய்யா
இளையராஜா பா கூட
இடியட்டம் கேக்குதய்யா
கண்ணா உன நெனச்சி
வீட்டுவழி போகயில
என்னோட கால் ரெண்டும்
காட்டுவழி போகுதைய்யா
கருவான உயிராட்டம்
என் உசிரு துடிக்குதய்யா
கருவாச்சி காவியத்த
உருவாக்கி படிக்குதைய்யா
பூக்காரி கைபிடிக்க
பூந்தேரில் வாரீரோ
கருவாச்சி பொண்ணுன்னு
கைவிட்டுப் போவீரோ
கைவிட்டுப் போனாலும்
கழட்டிவிட்டுப் போனாலும்
பொண்ணோட பொன் நெஞ்சு
உன்னோட சாகுமய்யா