இழப்பு

தன் தந்தையின் இழப்பு என்பது எவ்வளவு பெரிய வேதனை...வார்த்தைகளை தேடினாலும் கிடைக்காத அளவில் வலி இருக்கும்...ஆம்! உண்மை தான்..தன் தகப்பனின் இழப்பு செய்தியை கேட்டதும் கதறி அழுதான் மகன்...குடும்பத்துடன் சுற்றுலா வந்த இடத்தில் இப்படி ஒரு வேதனை தரக்கூடிய செய்தியை அவனால் தாங்க முடியவில்லை...
தன் மேலதிகாரியை தொடர்ப்பு கொண்டு தன் தந்தையை இழந்த செய்தியை தெரிவித்து விட்டு தான் இந்தியாவிற்கு உடனடியாக போக வேண்டும் என்பதையும் தெரிவித்தான்...
அவனுக்கு தேவையான அனைத்தையும் அவனது மேலதிகாரி செய்து கொடுத்தார்...பல சிந்தனைகளுக்கு இடையே தனது ஒன்பது மாத மகனையும், மனைவியையும் தன் நண்பரின் வீட்டில் விட்டு தான் மட்டும் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்...தன் தங்கையின் கணவர் இறங்கல் செய்தி சொன்னதோடு மட்டும் இல்லாமல் வருவதாக இருந்தால் நீங்க மட்டும் வாங்க , உங்க மனைவியும், மகனும் வர கூடாது என்று சொன்னது ஏனோ வலியை அதிகப்படுத்தியது...
ஏதேதோ சிந்தனைகளுடன் அவனுடைய பயணம் சிரமமாக இருந்தது...விடிந்து இந்திய மண்ணில் வந்து இறங்கிய நொடி அவனுள் ஒரு பயங்கர வேதனை , ஏன் கடவுளே எனக்கு இப்படி ஒரு வேதனை என நொந்து கொண்டே தன்னை அழைக்க வந்த நண்பருடன் தன் சொந்த ஊருக்கு கிளம்பினான்...
இரண்டு மணி நேரம் நொடி போல் மாயமானது...
தான் கட்டிய புது வீட்டிற்குள் முதன் முதலில் நுழைய போகும் நொடியை நினைத்து நினைத்து வேதனை கொண்டான்...
வீடு வந்தது, சொந்தங்கள் வீட்டை நிறைத்து இருந்தனர்..
தன் வாழ்க்கையின் லட்சியமாக இருந்த சொந்த வீடு இதோ கண் முன் கம்பீரமாக இருந்தது! தன்னை கட்டியணைத்து வரவேற்க வேண்டிய தகப்பன் இதோ கண் எதிரே அசைவுகள் அற்று சடலமாய் நடு வீட்டில் கிடத்தியிருந்ததை பார்க்க முடியாமல் திணறி போனான்...
மனம் வேதனையில் கண்ணீராய் கொட்டியது...
ஒரு வாரதிற்கு முன் தன் மனைவி தன்னிடம் சொன்ன வரிகள் காதுகளில் அவனுக்கு கேட்டது." உங்க அப்பா உங்களை பார்க்க வேண்டும் என சொல்ராங்க , நீங்க வந்து ஒரு வாரம் தங்கிவிட்டு எங்களையும் உங்களுடன் அழைத்து செல்லுங்க"...
தன் சூழ்நிலை காரணமாக வரமுடியாமல் போனதையும், இப்படி ஒரு வேதனையான சூழ்நிலையில் வந்து நிற்பதையும் நினைக்க நினைக்க அவனால் தாங்க முடியவில்லை....
தகப்பனின் இழப்பு என்பதை விட மோசமான வலி உலகில் எதுவும் இல்லை..ஒரு வாரம் ஓடியதே தெரியவில்லை...மகன் இப்பொழுது தந்தையின் இறுதி சடங்குகளை முடித்து தன் பணிக்காக கிளம்பினான்..பெற்றவர் இனி இல்லை, பெற்ற மகனும், கட்டின மனைவியும் தனக்காக தனியாக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி காத்து இருப்பது நினைவிற்கு வந்தது!

எழுதியவர் : பர்வீன் கனி (23-Feb-15, 9:10 pm)
சேர்த்தது : Parveen Fathima
Tanglish : ezhappu
பார்வை : 345

மேலே