மகள்
தன் குடும்பத்துடன் ஊட்டிக்கு சுற்றுலா வந்தது உண்மையிலேயே கனிக்கு மிகவும் மன நிம்மதியை கொடுத்தது...பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து குடும்பத்துடன் தங்கினார்...தன் அம்மா, தன் மனைவி, தன் இரு பிள்ளைகள் என தன்னை சுற்றிய தனக்கான உறவுகளுடன் மூன்று நாள் போனதே தெரியவில்லை...ஊட்டியில் பிரபலமான பூங்காவிற்கு செல்ல கனியின் குடும்பம் கிளம்பியது...பூங்காவிற்குள் நுழைந்ததும் மகன் தானாக இயக்கி செல்லும் படகு சவாரி செல்ல வேண்டும் என தன் ஆசையை சொன்னான்...அனைவரும் படகு சவாரிக்கு கிளம்பினர் , தனது மூன்று வயது மகளை கைகளில் வைத்து கொண்டு கனி தன் மகனையும் தன்னுடன் வந்த கார் டிரைவரையும் படகில் ஏற சொல்லி கொணடுயிருந்தார்... மகனும் , டிரைவரும் ஏறி படகில் உட்கார்ந்ததும் கனி படகில் ஏற தயாரானார்...ஏதோ மனம் ஒரு நிமிடம் "தன் கைகளில் இருந்த மகளை இறக்கி நிற்க வைத்துவிட்டு படகில் ஏறியவுடன் மகளை தூக்கி கொள்வது நல்லது" என தோன்றவே மகளை இறக்கி நிற்க வைத்து விட்டு படகில் ஏற நினைத்த நொடி காற்று பலமாக வீச படகு நகர்ந்து கனி தவறி தண்ணீருக்குள் விழுந்தார்...தானாக முயற்சி செய்து தண்ணியில் இருந்து வெளியில் வந்த நொடி தன் மகளின் அழுகையை கண்டு மனம் நெகிழ்ந்து போனார்...மூன்றே வயதான மகளின் பாசத்தை கண்டு கனியின் வலி மறையவில்லை என்றாலும் மறந்து போனது..
மகள் என்றாலே தனி பாசம் தான் அப்பாகளுக்கு! மகளின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை எந்த அப்பாகளும் விரும்புவதே கிடையாது...
தன் மகள் தனக்காக அழுததை பார்த்த கனி அன்று முதல் வெளியில் எங்கு சென்றாலும் படகு சவாரி போவதேயில்லை....