இசை

காற்றோடு நடை பழகி
காதோரம் இனிப்பது
பல மொழிகளையும்
பேச்சிழக்க வைப்பது

தனிமையின் வெறுமைகளை
இனிமையாய் நிரப்புவது
இதய சதுக்கத்தில்
புதையலாய் துடிப்பது

உயிரின் அடி ஆழத்தில்
நீரோட்டமாய் நகர்கிறது
நுண்ணிய துளைகளில்
ஒலியாய் ஊடுருவது

மௌன பொழுதுகளில்
உறைந்து விடுகிறது
மழலை மொழிகளில்
மயங்கி விழுவது

இன்ப துன்பங்களில்
நம்மை அரவணைப்பது
துவண்டு தவழும் போது
நம் தலை கோதுவது

கசிந்துருகும் உருமற்ற
உயிரின் வடிவமிது
காதலின் காரணமில்லா
முத்தத்திலும் பிறப்பதிது

நொடியில் விசை பரப்பி
செவி திறக்கும் சாவி இது
இயற்கையின் முதல்
கண்டுபிடிப்பிது..

எழுதியவர் : கோபி (23-Feb-15, 10:06 pm)
Tanglish : isai
பார்வை : 92

மேலே