உறக்கம் ~சந்தோஷ்
உறக்கம்..!
அன்னையின் கருவறையில்
ஒய்வு எடுத்தோமே
பத்து மாதம்
அது போதும் போதும்..!
நாளைய கல்லறையில்
நிம்மதி உறக்கமும்
உறுதியாய் இருக்கிறது
அது போதும் போதும்.
உறங்கவா பிறந்தோம் நண்பா.. ?
உணர்ச்சி எழுச்சியுடைவனுக்கு
உறக்கம் எதற்கு.....? தோழா
உறங்க உறங்க
உறக்கத்தின் சுகப்பனியில்
உறைந்திடாதோ
நம் இலட்சியம்.......?
விழித்திரு........!
விடாமல் உழைத்திடு..!
எதுவாக நீ நினைக்கிறாயோ
அதுவாகவே நீ மாறிட பாடுப்படு...!
இங்கு மறைந்த சூரியன்
வேறு எங்கோ உதித்திருப்பான்..!
தோழா.... தோழா.. மாறு மாறு
ஆதவன் உதிக்கும் திசையில்
உன் விடியலை மாற்றிப்பாரு...!
இரவென்பதே இல்லையென யோசித்துப்பாரு..!
வா நண்பா...! வா..!
இந்த உலகம் நமதே.......!
சாதிப்போம்... சாதித்தே தீருவோம்..!
-இரா.சந்தோஷ் குமார்.