பணிவும், துணிவும்

கிரேக்க ஞானி சாக்ரடீசை ஒரு அற்பன் காலால் உதைத்துவிட்டான்.இதைக்கண்ட அவருடைய நண்பருக்கு ஆத்திரம் பொங்கியது.

ஆனால் சாக்ரடீஸ் பொறுமையாக இருந்தார்.

வாயைத் திறக்கவில்லை முகத்தைச் சுளிக்கவில்லை.

ஆனால் சாக்ரடீஸின் நண்பருக்கோ நிலை கொள்ளவில்லை.என்ன அந்த மடையன் உங்களை காலால் உதைத்து விட்டான்.நீங்கள் சும்மா இருக்கிறீர்களே என்று கேட்டார்.

நண்பரைப் பார்த்து சாக்ரடீஸ்,

“ஒரு கழுதை என்னை உதைத்தால்,நான் அதை திருப்பி உதைப்பேன் என்று நினைக்கிறாயா நண்பா?” என்று கேட்டார்.

ஆம்,ஆத்திரத்திற்கு இடம் கொடுத்தால் மனம் பாழ்பட்டு போகும்.நிதானம் தவறாமல் இருக்க வேண்டுமானால் நியாயமான கோபத்திற்கு கூட அதிக முக்கியத்துவம் தரக்கூடாது.

பரபரப்பும், பதற்றமும், பணிவையும், துணிவையும் உண்டாக்காது.அப்படிப்பட்ட மனிதன் வலிமைமிக்கவனாக விளங்க முடியாது .

நாம் வாழ்க்கையில் உயர்ந்து முன்னேற வேண்டுமானால் பணிவும் துணிவும் கொண்டு செயல்பட வேண்டும்.

இதுதான் நம்மை வெற்றி பெற வைக்கும்.

ஆம்,என் இனிய நண்பர்களே.,

உயர்வுக்குத் துணையாக இருப்பது பணிவும், துணிவும்.

கோழைத்தனம் கூடாது. கர்வம் ஆகாது.

பணிவு பக்குவத்தை உண்டாக்கும்.

துணிவு எல்லையைத் தொடுகின்ற வல்லமையைத் தரும்.

பணிவும் துணிவும் இணைந்தால் சிறப்பாக

நம் வாழ்வு அமையும்..,

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (24-Feb-15, 3:39 pm)
சேர்த்தது : சந்திரா
பார்வை : 80

மேலே