அம்மாவிற்கு

ஆயிரம் உறவுகளை கடந்து வந்து விட்டேன் " அன்னை " ஓர் உறவிற்கு
மட்டுமே இந்த அகிலமே அடக்கம் .....

பஞ்சணையில் படுத்துதான் உறங்குகிறேன் தினமும் இருந்தும் கிட்டவில்லை
எனக்கு தாய்மடியில் தலை சாய்த்து துயில் கொள்வது போன்ற ஒரு சுகம் ....

என் கண் கலங்கி நிற்கும் போது கண்ணீர் துடைக்க பல கரங்கள் இருந்தாலும் என்
முகத்தில் வழிந்தோடும் கண்ணீரும் ஏங்கும் உன் முந்தானை நுனிக்காக...

எனக்கொரு குழந்தை ஆனாலும் என்னை ஓர் குழந்தையாக
பார்ப்பது தாய் அன்பு மட்டுமே .........

நீ ! கண் மூடும் வேளையில் கூட என்னை ஒப்படைத்து விடுகிறாய்
உனக்கு ஒப்பான எனக்கு தாரமாக வந்த ஓர் தாயிடம் ........

தினம் ! தினம் ! ஓர் கடவுளை துதித்து கொண்டு இருக்கிறேன் பாசமிகு என் அன்னையின்
பாதங்களுக்கு கீழ் ஓர் நாளாவது பஞ்சாக இருப்பதற்காக ..................

------ மழலை கவி ( மனோஜ் )

எழுதியவர் : மழலை கவி ( மனோஜ் ) (24-Feb-15, 6:49 pm)
சேர்த்தது : மனோகுட்டி
Tanglish : ammaavirku
பார்வை : 397

மேலே