தொடர்கிற கனவு

மரமாகும் கனவு கொண்டு..
விதையாக விழுந்தவன் நான்
விழுந்தவரை மறக்கும் உறவாக..
என்னையும் மூடிமறைத்தது மண்
அடைபட்ட காற்றாய் அடங்காதநான்..
முளைவிட் டெழுந்தேன் முதல்நாளே.!
ஊர்ந்தோடி உரம்தேடி உயிர்தேட..
வேர்களால் உழைத்துவிட்டு..
வானோக்கி உயர்ந்தெழுந்து..
மரமாகி கிளையும் விட்டு..
காய்காகப் பூவை ஈன்று..
கனியும்வரை காயைக் காத்து..
உணவாக கனி தந்தும்
கைகொண்டு பறிக்காமல்..
கல்லெறிந்து கனி பறித்தான்
காத்திருந்த முதலாளி
பறித்த கனியில்..
உறித்த விதையில்..
தொடர்கிறது என்கனவு

எழுதியவர் : moorthi (25-Feb-15, 12:52 pm)
பார்வை : 76

மேலே