தூற்றுவோர் தூற்றட்டும்

கௌதம புத்தர் துறவியானதும் தினமும் தனக்கு வேண்டிய உணவை பிச்சை எடுத்து சாப்பிட்டு வந்தார்.

ஒரு நாள் ஒரு வீட்டில் அவர் பிச்சை கேட்டபோது ...'

போ..போ.. தடிமாடு மாதிரி இருந்துகொண்டு, ஏன் பிச்சை எடுக்கிறாய்' என விரட்டினார் அந்த வீட்டில் இருந்தவர்.

உடனே புத்தர் ' ஐயா' என அவரை அழைத்தார்'

அந்த வீட்டுக்காரரும் ' என்ன?' என்றார்.

நீங்கள் எனக்கு ஏதேனும் பிச்சை போட்டிருந்தால் அது யாருக்கு சொந்தம்' எனக் கேட்டார்.

' போட்டிருந்தால் அது உனக்கு சொந்தம் ' என்றார் வீட்டுக்காரர்.

'நீங்கள் போடும் பிச்சையை நான் மறுத்துவிட்டால்' என வினவினார் புத்தர்.,

'எனக்குதான் சொந்தம்',என்றார் வீட்டுக்காரர்., 'சற்று முன்பு என்னை விரட்டினீர்களே ...அதை ஏற்க நான் மறுத்துவிட்டேன்...

எனவே...

அது உங்களுக்கு சொந்தம் ' என்று கூறிச் சென்றார்.

ஆம்.,நண்பர்களே.,

நம்மை தூற்றுபவர்களைக் கண்டு ...பதிலுக்கு நாமும் தூற்றக் கூடாது.


நாம் மௌனமாய் இருந்தால்....,,தூற்றப்பட்ட வார்த்தைகள் தூற்றுபவரைச் சாரும் என்பதை நாமும் உணர்வோம்,

நம்மை தூற்றுபவரையும் உணர வைப்போம்.

தூற்றலைக் கேட்டு ஆத்திரப்பட்டு,

மறுப்புரை வழங்குவது பெரிய கடினமான காரியமல்ல.

தூற்றலைத் தாங்கிக் கொள்ளும் சக்தி பெற்றவர்கள் நிச்சயம்

நல்ல காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதை மனதில்

கொள்ள வேண்டும்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (26-Feb-15, 12:20 pm)
சேர்த்தது : சந்திரா
பார்வை : 196

மேலே