இனிய உளவாக இன்னாத கூறல்

முல்லா நசுருதீன் ஒரு கடைக்குச் சென்றார் அந்தக் கடையில் பலவிதமான வாசனைத் திரவியங்கள் வைக்கப்பட்டிருந்தன.

அந்த ஊரிலேயே மிகச்சிறந்த வாசனை திரவியக் கடை அது. அந்த கடையில் இருந்த விற்பனையாளர் முல்லாவிடம் ஒவ்வொரு திரவியமாக எடுத்து காட்டினார்.

இந்த திரவியத்தை நீங்கள் பூசினால் முகத்தில் இருக்கின்ற தூசுகள் எல்லாம் வந்து விடும் முகம் பளபளப்பாய் இருக்கும் என்று சொன்னார்.

வேறு ஒரு திரவியத்தை பூசினால் அழுக்குகள் எல்லாம் வெளியில் வந்துவிடும் என்று காட்டினார்.

இதையெல்லாம் நிதானமாக கேட்டுகொண்டிருந்த முல்லா நான் இதுவரை இப்படி ஒரு கடையை பார்த்ததில்லை .

எனக்கு வயதாகிவிட்டது. இனி முகத்தை பளபளப்பாக வைத்து என்ன செய்யப் போகிறேன்.

வெளியே இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்வது போல ,மனதின் உள்ளே இருக்கும் அழுக்குகளை துடைத்து மனதை சுத்தமாக வைக்க ஏதாவது வாசனை திரவியம் இருக்கிறதா? என்று கேட்கிறார் .

கடைக்காரர் முழிக்கின்றார்.,

இந்த கதை நகைச்சுவையாக இருந்தாலும் ஆழ்ந்து சிந்திக்க கூடிய கருத்தை சொல்லிச் செல்லுகிறது .

மனதில் அழுக்குகளை வைத்து கொண்டுவெளியே செய்கின்ற ஒப்பனைகள் வெறும் முகபூச்சாக குறுகிய காலம் மட்டுமே இருக்கும்.நம் புன்னகை கூட போலியாக வெளி வேசமாக இருப்பதை சிறிது நேரத்தில் காட்டி கொடுத்துவிடும் .

ஆகையால் மனம் சுத்தமாக வேண்டுமென்றால் ஒவொரு புலனும் சுத்தமாக இருக்க வேண்டும்.கண்களில் இருக்கும் அசுத்தம்,காதுகளில் இருக்கும் அசுத்தம் போலவே,வார்த்தைகளில் இருக்கும் அசுத்தங்களை நீங்க வேண்டும்

அதற்கு முதலில் நாம் நம் எண்ணைகளை சுத்தமாக்க வேண்டும்.நாம் நல்லவற்றை சிந்திக்கும் போது,நம் கண்கள் நல்ல ஓவியங்களை பார்கிறது.நம் காதுகள் நல்ல வார்த்தைகளை கேட்கிறது.அப்போது மனம் தானாகவே சுத்தமாகிவிடும்.

இதைதான் வள்ளுவ பெருந்தகை கூறுகிறார் .

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று என்று கூறுகிறார் ."

இனிய சொற்கள் பரந்து இருக்கும் போது,

கடுஞ் சொற்களை கையாள்வது,

பழுத்த பழங்கள் குவிந்து கிடக்கையில்,

காய்களை தேடி பிடித்து உண்டு,

அதன் பின் அதன் கசப்பை உணர்வது போல இருக்கிறது

என்று அருமையாக சொல்லுகிறார்.

ஆம்,நண்பர்களே.,

இனி நல்ல பழங்கள் போன்ற

சுவை மிகுந்த வார்த்தைகளை

நாம் பயன்படுத்தலாமே.. .

எழுதியவர் : படித்ததில் பிடித்தது (26-Feb-15, 12:19 pm)
சேர்த்தது : சந்திரா
பார்வை : 161

மேலே