இன்று என் தோழியின் பிறந்த நாள்
 
            	    
                மொட்டென கருப்பையில் குவிந்து 
கிடந்த தாமரை ஒன்று 
மலராய் அரும்பிய நாள்!
கருமேகங்களுக்கு இடையில் 
ஒளிந்து கிடந்த விண்மீன் ஒன்று 
புவியை தொட்ட ஒரு நாள்!
பிறை நிலா ஒன்று 
பிள்ளை வடிவெடுத்து 
மண்ணில் பிறந்த ஒரு நாள்!
மதயானை கூட்டங்களுக்கு இடையில்
மான்குட்டி ஒன்று 
துள்ளிக்குதித்த ஒரு நாள்!
நன்றி சொல்கிறேன் கடவுளே 
நீ கொடுத்த அந்த ஒரு நாளுக்கும் 
இத்தனை அம்சங்கள் பொருந்திய 
தேவதையை எனக்கு தோழியாய் 
கொடுத்த ஒரு நாளுக்கும்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா
	    
                
