மனதைச் சுட்டது

பேருந்தில்
ஜன்னலோர இருக்கை
வழக்கமான பாதை
இருப்பினும்
சற்றும் சலிக்காமல் வெளியே
ரசித்துக்கொண்டிருந்தன
இரு விழிகள் !


திடிரென்று இரு விழிகளும்
வலித்தன
ஒரு பேருந்து நிலைய வளைவில்!

கூவி கூவி அனைவரையும்
அழைத்துகொண்டிருந்தது
அந்த பத்து வயது உதடுகள்!

ஒளி மின்னும்
சிறு பொம்மைகளுக்கு பின்னால்
ஒளி இழந்த முகத்தோடு
அந்த சிறுவன்!

யாராவது தன் அருகில்
வருவார்களா
இரவு உணவிற்காவது
வழி செய்வார்களா
என்ற ஏக்கத்தில் விழிகள் !

பொம்மைகளோடு
கொஞ்சி விளையாட வேண்டிய
மனம்
ரணமாய்
பொம்மைகளோடு
கெஞ்சிக்கொண்டே இருந்தது!

சற்றென்று கடந்ததது
பேருந்து மட்டுமே
என் மனது அங்கேயே
பயணித்துக்கொண்டிருந்தது!

எழுதியவர் : கவிபுத்திரன் (26-Feb-15, 10:41 pm)
பார்வை : 288

மேலே