என் காதலியின் திருமணம் எதிரே நடந்து

என் காதலியின் திருமணம் எதிரே நடந்து கொண்டிருக்கிறது எவனோ ஒருவன் போல் நான் அமர்ந்து கொண்டிருக்கின்றன்


தாடி வளர்க்கும் வயதும் இல்லை போடி என்று சொல்ல மனமும் இல்லை

என்னோடு நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவள் அவரோடு நின்று
நிழற்படம் எடுத்து கொள்கிறாள்

கண்ணத்தில் முத்தமிட மறுத்தவள் அவர் ஏதோ காதருகில் சொல்ல இவளும் கூர்ந்து கேட்டு கொண்டிருக்கிறாள்

அழகான கூரை புடவை கட்டி மூன்றாம் பிறைநிலா போல் இருக்கும் நெற்றியில் நெற்றிச்சுட்டி

நான் பிடித்து முத்தம் கொடுத்த கைகளில் மருதாணி போட்டிருக்கிறாள் அதன் வாசம் இங்கு வரை வீசுகிறது
அவள் கழுத்தில் ஏறவே வரம் வாங்கி வந்த மாலை அணிந்திருக்கிறாள் அடிக்கடி என்னையும் பார்க்கிறாள் யாரோ ஒருவரைப் போல

யாருக்கும் தெரியாமல் இருட்டிலே என்னோடு கை கோர்த்து நடந்தவள் இன்று ஆயிரம் பேர் முன்பு அக்னியை சாட்சி வைத்து சுற்றி வருகிறாள்
ஏமாந்தவன் எதிரிலே இருக்க இன்னொருவனுடன் உனக்கு திருமணம் இதற்கு நான் சாட்சியா என்று அக்னி கொழுந்துவிட்டு எரிகிறது

அருகிலே அவள் சகோதரி இருக்கிறாள்
மணப்பெண்ணை போலவே அவளும் உடை அணிந்து நிற்கிறாள் என் காதலை பிரித்ததில் பெரிதும் பங்கு இருக்கிறது அவளுக்கு மன்னிக்கவும் அவருக்கு

தாய் தந்தையும் இருக்கிறார்கள் நாம் பெற்ற பெண் எந்த தவரையும் செய்யவில்லை என்ற மன நிறைவோடு

அண்ணன் இருக்கிறான் இன்றுதான் அவரை முதல் முறை பார்க்கிறேன்

அவள் கழுத்திலே தாலி கட்டப்போகும் கணவன் இருக்கிறான் இவள் பத்தினிதான் என்ற பாசத்தோடு

உண்மைகள் அனைத்தும் தெரிந்தும் நான் ஊமையாக இருக்கிறேன்

அவள் என்னோடு பழகியதை நினைத்து பார்க்கிறேன் வெகுண்டெழுந்து வருகிறது அழுகை அதை கை குட்டையும் கண்ணாடி வைத்தும் மறைக்கின்றேன்

வெள்ளி தட்டில் அட்சதை வருகிறது நானும் அதை எடுத்துக்கொண்டேன்
மந்திரங்கள் ஓத மேலங்கள் ஒலிக்க அவள் தலை குனிகிறாள் அவர் தாலியை கட்டி விட்டார் நானும் அட்சதை தூவினேன் எங்கிருந்தாலும் வாழ்க என்ற எண்ணத்தோடு

அவள் என்னை பார்க்கிறாள்
இவனை பெரிதாய் ஏமாற்றி விட்டோம் என்ற எண்ணத்தில்


அவள் ஏற்றிய காதல் நாடகத்தில் அழகாய் நடித்து முடித்து மணமேடை ஏறி விட்டாள் நடிக்க தெரியாத நான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றேன்

எல்லாம் முடிந்து விட்டது என்று அவள் எண்ணலாம் ஆனால் இதுதான் ஆரம்பம் என்று அவளுக்கு தெரியாது

அவள் கண்களில் இருந்து கண்ணீர் சிந்த கூடாது என்பதற்காகவே அவளை விட்டு விட்டேன்

என் மனதில் நிலவை நின்று தொடும் அளவிற்கு கட்டிய காதல் கோபுரம் சித்தெரும்பை விட சிறியதாக சிதறி போனது

எழுதியவர் : Vicky (27-Feb-15, 1:01 pm)
சேர்த்தது : விக்னேஷ்
பார்வை : 331

மேலே