என்னவளே -தொடர்கதை
என்னவளே
பகுதி-3
கல்பனா ஹாலில் அமர்ந்து அம்மா கொடுத்த பலகாரங்களை ருசித்துக்கொண்டிருந்தால்...அவள் தம் மனதினுள் வெகு விரைவில் சியாமிடம் தம் காதலை தெரியபடுத்தி விட வேண்டும் என எண்ணிக்கொண்டிருந்தால் ...ராஜலக்ஷ்மி அம்மாள் மகளின் அருகில் வந்து அமர்ந்து ...கல்பனாவின் அழகை பார்த்து வியந்தாள் ...என்ன அழகு இந்த பேரழகிக்கு ராஜகுமாரன் எங்கிருக்கிறானோ என்று எண்ணியவாறு தான் சுட சுட செய்திருந்த பக்கோடாவை மகளுண்டன் சேர்ந்து உண்டால் ..அம்மா இன்னைக்கு காப்பியும் பக்கோடாவும் அமர்க்களம் என்று குதுகூலித்தால் கல்பனா .... கல்பனா நான் உனக்கு காலையிலேயே போன் பண்ணலாம்னு நினைச்சேன் நீ அலுவலகத்தில் மிகுந்த வேலையில் இருப்பியோ என்னவோன்னு தொந்தரவு செய்யவில்லை என்று அவளை நோக்கினாள்..கல்பனா சிறிது துனுக்குற்றவளாய் என்னம்மா என்ன விஷயம் நீ ஏதும் முக்கியமான விஷயம் இல்லனா போன் பண்ற அளவு யோசிக்கமாட்டியே என்றாள் மனதினில் பயம் மிகுந்தவலாய் .....
நான் காலையில உன்னோட துணிமணிகளை மடித்து ஷெல்பில் வைக்க உன் அறைக்கு போனேன் அப்பொழுது உன் கட்டிலின் மீது சில போடோக்கள் இருந்தது அதை பற்றி உன்னிடம் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் என்றாள். கல்பனாவிற்கு மனது பதறியது இப்பொழுது என்ன சொல்வது ..இன்னும் சியாமிடமே தன் காதலை சொல்லவில்லை அவன் மனதில் என்ன இருக்கிறது என்று அறியாமல் என்ன செய்வது என்று திகைத்தாள் . ராஜலட்சுமி அம்மாள் சிறிது குரலை உயர்த்தி கல்பனா என்ன திரு திருன்னு முழிக்கற யார் போட்டோ அது என்றாள் .
அம்மா அது என் தோழி லதாவின் பாய் பிரண்ட் போட்டோம்மா அவள் போன வாரம் இங்கே வந்த பொழுது அத இங்க மறந்து வச்சுட்டு போய்டாம்மா இன்னைக்கு நான் கொண்டு போய் கொடுக்கலாம்னு எடுத்து வச்சேன் நானும் மறந்துட்டேன் என்று பொய்யை மெய்யாகவே சொல்லி முடித்தாள் கல்பனா .அம்மா பெறு மூச்சுடன் ஓ அப்படியா நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன் என்றாள் .சரி எனக்கு சமையல் அறையில் வேலை இருக்கு என்று நகர்ந்தாள்.
பகுதி-4
காதலித்து பார்
பொய்யும் மெய்யாகும்
மெய்யும் பொய்யாகும் என்று மனதில் எண்ணி சிரித்தவாறு அறையினுள் சென்று தன் தோழி லதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விஷயத்தை தெரியப்படுத்தினாள்.லதா கோபமாக ஏன் அப்படி சொன்னாய் உன் அம்மா என்னை பற்றி என்ன நினைப்பார்கள் நாள் இனி உங்கள் வீட்டிற்கு எப்படி வருவது என புலம்பினாள் .கல்பனா அவளை சமாதானப்படுத்த வேறு சில விஷயங்களை பேசி அவளை தேற்றினாள் .பிறகு பூஜை அறைக்கு சென்று அவள் தினமும் மாலை வேளைகளில் பாராயணம் செய்யும் 'லலிதா சகஸ்ரநாமம் ' 'கந்த குரு கவசம் ' படித்து மனதில் அமைதி படற பூஜை அறையில் இருந்து வெளியேறினாள்.
ராஜலக்ஷ்மி அம்மாள் இரவு உணவை சுடசுட எடுத்து தட்டுக்களில் பரப்பினாள். ராஜலக்ஷ்மி அம்மாளின் கை மணம் அந்த சிறு நகரமே அறிந்த ஒன்று .அவளது கைமணம் அறிந்தே அவ்வப்பொழுது உறவினர்களும் நண்பர்களும் மிகுந்த விசுவாசத்துடன் அவர்கள் இல்லத்திற்கு வருவது வாடிக்கை . அன்று மழைக்காலம் ஆதலால் ராஜலக்ஷ்மி அம்மாள் பூண்டு ரசம் தேங்காய் துவையல் மாவடு போன்றவற்றுடன் சிம்பிளாக சமையலை முடித்துக்கொண்டாள் .தட்டில் சாதம் பரிமாறி நெய் ரசம் துவையலுடன் கல்பனா உண்ணத் தொடங்கினாள். ராமைய்யா பிள்ளை rajalakshmi அம்மாவிற்கு கல்பனா என்றும் குழந்தையாகவே தெரிந்தாள்..ராமைய்யா பிள்ளை ராஜலக்ஷ்மி அம்மாளிடம் ரசம் பிரமாதம் என்றார் ...அம்மா கல்பனா நீ எப்போ சமையல் கத்துக்க போற நாளைக்கு போற எடத்துல நீ அவங்களுக்கு வாய்க்கு ருசியா சமைச்சு குடுக்க வேண்டாமா என்றார் .அப்பா அதுக்கு இப்ப என்ன அவசரம் நான் நினைத்தாள் இரண்டே நாள்ல கத்துப்பேன் என்றாள் பெருமையாக .அதற்கு ராஜலக்ஷ்மி அம்மாள் இது ஒன்றும் கணிதம் இல்லம்மா ஒரே நாள்ல படிச்சு பாஸ் பண்றதுக்கு இது ப்ராக்டிகல் செய்ய செய்ய தான் கைமணம் வரும் என்றாள் .
அதன் பிறகு அனைவரும் சாப்பிட்டு தம் தம் பணிகளை செய்ய தொடங்கினர் .கல்பனா அவளது அறைக்கு சென்று கதவை தாழிட்டாள் .சரியாக நேரம் பத்து என்றவுடன் சியாம் அவளை அழைப்பதை வழக்கமாக கொண்டுள்ளான் . இன்றும் கல்பனா அந்த போனையே நொடிக்கு நூறு தரம் நோக்கியவலாய் தன் அலுவலக பணியை செய்துகொண்டிருந்தாள். இரவு 10.30 ஆகியும் அன்று அழைப்பு வரவே இல்லை .ஏன் என்று புரியாதவளாய் கல்பனா உறங்க தொடங்கினாள் .இரவு 12 மணி அளவில் அறைக்கதவு தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்தாள்.
------------------- தொடரும் --------------