தற்கொலை அல்ல கொலை

கொடைக்கானல் மேகங்கள் மலையை உரசியபடி, இதமான குளிரில் ரம்மியமாய் காட்சியளித்தது. ஆனால் அங்கே ஒரு அழகான வாலிபன் தன் வாழ்க்கை பயணத்தின் முற்றுபுள்ளியை வைக்க அங்குள்ள தற்கொலைமுனையை (suicide point)தேர்வு செய்தான். அந்த விளிம்பின் ஒரு அடி தொலைவில் நின்று இருந்தான்.

அது ஒரு அதள பாதாளம். கீழே விழுந்தால் எலும்பு கூட மிஞ்சாது.
தன் பிணத்தை கூட யாரும் பார்க்ககூடாது என விரும்பினான். இனிமேல் அவனுடைய எதிர்கால இன்ப துன்பங்கள் IPL மேட்ச் போல அடிக்கடி வராது. மனிதர்களின் சாவுக்கு காத்திருக்கும் பிணம் திண்ணிகழுகுகள், வெற்றியை எதிர் நோக்கி காத்திருக்கும் வேட்ப்பாளர் போல அரவிந்தின் மரணத்தை எதிர்பார்த்தன.
சுற்றிலும் இதமான தென்றல். அரவிந்தின் உள்ளத்திலோ அஸ்தமன புயல்.
வாழ்வுக்கும் சாவுக்கும் எத்தனை தூரம் என்று நமக்கு யாருக்கும் தெரியாது. ஆனால் அரவிந்துக்கு நன்றாக தெரியும் அது ஒரு அடி தூரம் தான் என்று. காலால் ஒரு அடி முன் வைத்தால், அகாலம் உடனடி. எமனுக்கு emergency duty கொடுப்பதா வேண்டாமா என தீர்மானிக்கும் பொறுப்பில் அரவிந்த் இருந்தான்.
என்ன ஒரு விந்தை இவன் கீழ் நோக்கி பாயிந்தால், மேல் நோக்கி மரண பயணம். இவன் எதிர்காலம், நிகழ்காலம் எல்லாம் ஒரு நொடி பொழுதில் இறந்தகாலமாகிவிடும். ஏனிந்த முடிவு ?
அவன் முன் நோக்கி பாயும் முன் நாம் ஒரு சில மணி நேரம் பின் நோக்கி பயணிப்போம்.
கோவையில் இருந்து கொடைக்கானல் நோக்கி இன்ப சுற்றுலா கிளம்பினர் RPG MARINE இன்ஜினியரிங் இறுதி ஆண்டு மாணவர்கள்.

எல்லாரும் DHOOM 3 படத்தை DVD இல் ரசித்து கொண்டு இருக்க, அரவிந்த் மட்டும் i pod இல் “எங்கே செல்லும் இந்த பாதை” பாட்டை உள்ளம் நசிந்து போனதால் கேட்டுக்கொண்டிறிந்தான். பக்கத்துக்கு சீட் பார்கவி மெல்ல பேச்சு கொடுத்தாள்.
‘என்ன அரவிந்த் உற்சாகம் இல்லாம அமைதியாக இருக்கே’
ஒன்னும்மில்ல லேசா தலைவலி’
நா வேணா zandu bam தரட்டா?
வேணாம் காலையில் எல்லாம் நின்னுடும் ( ? )
மறுநாள் இவன் போட போகும் bam மை அறியாமல் அதிகாலையில் கொடைக்கானலை அடைந்தது இவர்களின் பஸ். குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு போகும் முன் அனைவரும் சில்வர் பால்ல்சில் குளித்தனர். தரிசனம் முடித்த பிறகு அனைவரும் பஸ்ஸில் ஆஜர், அரவிந்தை தவிர.
அவன் செல் போன் அணைக்கப்பட்டு இருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எப்படி கிடைப்பான் யாருக்கும் தெரியாமல் அவன்suicide point போய் 2 மணி நேரம் ஆகிவிட்டது. போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்தனர். அதற்குள் ஒரு பிணம் suicide point இல் கிடப்பதாக தகவல் வர அனைவரும் அந்த இடம் நோக்கி ஓடினர். வெள்ளை துணியில் மூடபட்டிறிந்த உடலை அடையாளம் காட்ட
அரவிந்தின் நெருங்கிய நண்பன் அனுமதிக்கபட்டான். தயங்கியபடி மெல்ல துணியை விலக்க, அழகிய அரவிந்த் அலங்கோல பிணமாய் கிடந்தான். சுற்றியிருந்த கூட்டம்அதிர்ச்சியில் உரைந்தது. நிசப்தமான சூழ்நிலை பலத்த கைத்தட்டலால் கலைந்தது.
திரைப்பட இயக்குனர் சுதிர் “கட்” என்று கூறியப்படி அரவிந்த பாத்திரத்தில் நடித்த மிராக்கில் ஸ்டார் முகிலிடம் வந்தார். “சார் அருமை அருமை உங்கள மாதிரி பொணமா நடிக்க யாராலையும்முடியாது இந்த ஒரு சீனுக்கே உங்களுக்கு கண்டிப்பா தேசிய விருது கிடைக்கும்”


முகத்தை துடைத்தப்படியே தன் கேரவனை நோக்கி நடந்தார் மிராக்கில் ஸ்டார் முகில். “சார் சார் ஒரு சின்ன ஹெல்ப்” என வழியை மறித்தான் உதவி இயக்குனர் சென்பக ராஜ் என்ற செம்பு. “என்ன?“ என்பதை தன் முகப்பாவனையில் கேட்டார். “உங்களோட தீவிர ரசிகை ஒருத்தி உங்க ஆட்டோகிராப்காக என்னை ரொம்ப தொந்தரவு பண்றாங்க ……… தயவு செய்து போட்டு கொடுத்துடுங்க” முன்தினம் அவளிடம் வாங்கிய ஆயிரம் ரூபாய் பேசியது.
“அப்புறம் பார்க்கலாம்” தவிர்த்தார்
“இல்ல சார் அந்த அழகான பொண்ணு உங்க ஆட்டோகிராபுக்காக ரொம்ப நாளா ஏங்கி கிடக்குது ” என அவரின் பலவீனத்தை தொட்டான்.
“சரி அந்த பொண்ண கூட்டிட்டு வா”
“இல்ல சார் அந்த பொண்ணு வித்தியாசமா ஆட்டோகிராப் வாங்கணும்னு ஆசைப்படுது. அதனால நீங்களே அந்த பொண்ணோட கார் வரைக்கும் வந்து ………….”
சிரித்தபடி பெண்ணை நோக்கி நடந்தார் மிராக்கல் ஸ்டார்
“என்னம்மா வித்தியாசமா ஆட்டோகிராப் வேணுமாமே எப்படி?”
“சார் if you don’t mind என் முதுகில போட முடியுமா?” அழகி சிரித்தாள்
“என்னம்மா இத்தனபேர் பார்க்கராங்க தப்பா நினைக்க மாட்டாங்களா?”
“ப்ளீஸ் சார் காருக்குள்ள வந்து ஆட்டோகிராப் போட்டுக் கொடுங்க பர்மன்னென்ட் மார்க்கர் கூட இருக்கு”
“சரி கார்ல ஏறும்மா”
இருவரும் காரில் ஏறியவுடன் செம்பு சற்றும் எதிர்ப்பாரா விதமாக கார் விர்ரென பறந்தது. காரின் பின்னால் செம்பு பதற்றத்துடன் ஒடினான் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் மறைந்தது.
“யார் நீங்க ……… இங்க என்ன நடக்குது?” பதறினான் மி.ஸ்டார்
வண்டியை ஒட்டியப்படியே வினோத் “ ஏன்டா சினிமால நடிக்க வாய்ப்பு கேட்டு வந்த என் தங்கச்சிய சீரழிச்சிட்டியேடா படுபாவி ……… உன்னால அவ இங்கதான் தற்கொலை பண்ணிக்கிட்டா உன்னையும் இங்கயே அழிசிட்டா தான் என் ஆத்திரம் தீறும்.
ஏன்டா சண்டாளா என் அக்கா வாழ்க்கையை அநியாயமா அழிசிட்டையே உனக்கு நரகம் கூட போறாது – என்று துப்பாக்கியை அவன் தலையில் வைத்தாள் ஆட்டோகிராப் கேட்ட அழகி.
முதுகுல ஆட்டோகிராப் போடறது இருக்கட்டும் , இப்ப நான் உன் நெஞ்சில் ஆட்டோகிராப் போடறேன் எப்படி இருக்குன்னு செத்த பிறகு சாவகாசமா பார் என்று துப்பாக்கி ரவையால் துளைத்து எடுத்தாள்.
பிணத்தை பள்ளதாக்கில் வீசிவிட்டு பறந்தது கார்.
மறுநாள் செய்தித்தாள்களில் தலைப்பு செய்தியாய் மி.ஸ்டார்
பிரபல நடிகர் மிராக்கிள் ஸ்டார் கொடைக்கானலில் படுகொலை. கொலையாளிகளை போலீஸ் தேடுகிறது.
அடையாளம் தெரியாத கும்பலால் கடத்த பட்டு கொல்லப்பட்டார் நடிகர் முகில்
போலீஸ் விசாரணை உதவி இயக்குனர் செம்புவிடமிருந்து துவங்கியது.
இனி செம்பு சொல்லும் கதையை கேட்போம்
மி.ஸ்டார் கொல்லப்பட்ட பிறகு போலீஸ் விசாரணை என்ற பெயரில் பல நாட்கள் அடைத்து வைத்து என்னை துன்புறுத்தினர். ஒரு ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்ட அப்பாவி தான் நான் என்று உண்மை தெரிந்த பிறகு என்னை விடுவித்தனர். ஆனாலும் கேசுக்காக அவ்வப்போது கோர்ட்க்கு போகவேண்டி இருந்தது. வழக்குகள் வழக்கமாக வாய்தா வாங்கி வழுக்கி கொண்டே போனது.
படமும் பாதியிலேயே கைவிடப்பட்டது. முக்கியமான கதாபாத்திரம் இல்லாமல் படத்தை மேற்கொண்டு எடுக்க தாயாரிப்பாளர் தயாரில்லை. தைரியமும் இல்லை.
படத்தை எடுத்தது புதுமுக இயக்குனர். சினிமா துறையில் ராசி இல்லாதவர் என ஓரம் கட்டப்பட்டார். என் நிலையை கேட்கவே வேணாம்.
சென்னையும் வேணாம், சினிமாவும் வேணாம் என்று என் சொந்த கிராமத்தில் மாட்டுசந்தை தரகர் ஆகிவிட்டேன்.
என் சினிமா வாழ்க்கை தொலைந்தது கூட பரவாயில்லை. அந்த சினிமா ஷூட்டிங்கில் அரவிந்து பாத்திரம் எதர்காக தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தது ? என்ன காரணம் ? என்று உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தெரியாது என்று நினைக்கும்போது எல்லாம் எரிச்சல் வருகிறது.
அதுமட்டுமல்ல ஆயிரம் ரூபாய் நோட்டை பார்க்கும்போதும், டிவியில் ஆட்டோகிராப் படத்தை பார்த்தாலும் எரிச்சல்தான் வருகிறது.
அவ்வளவு ஏன்? தெருவில் ஆட்டோவை பார்த்தாலே அலர்ஜியாக இருக்கிறது.

எழுதியவர் : (27-Feb-15, 8:53 pm)
பார்வை : 221

மேலே