புதுமைப் பெண்ணாய்ப் பிறப்பெடு
பெண்ணே...!
உன் ஆற்றல்
அளவிடற்கரியது...!
அதை
அடகு வைத்து
அழகு பார்ப்பது அழிவிற்குரியது...!
நான்கு சுவர்களுக்குள்
அடங்கிக் கிடந்தாய் ...!
முக்காடிட்டு
மூலையில்
முடங்கிக் கிடந்தாய் ...!
இப்பொழுதுதான் ,
இருளைக்கிழித்து
இயக்கம் கொண்டுள்ளாய்...!
எனவே ,
பெண்ணே...!
இன்றைய
நாகரீகப் போதையில்...
அரைகுறை ஆடையில் ...
நகைநட்டு மயக்கத்தில் ....
கவர்ச்சிக் களியாட்டத்தில் ...
உன்னை
மாய்துக்கொள்லாதே...!
தொலைக்காட்சியே
உலகமென்று எண்ணி
உன்
முகவரியைத்
தொலைத்து விடாதே...!
மோகக் குட்டைக்குள்
உன்
கற்பென்னும் படகைக்
கவிழ்த்துவிடாதே ...!
காதல் நெருப்பினில்
விட்டில் பூச்சியாய்
வீழ்ந்துவிடாதே...!
சிற்றின்பச் சிறையில்
சிக்கித் தவிக்காதே...!
பெண்ணென்னும்
பெரும் நெருப்பே!
மண் காக்கப் புறப்பட்டு!
பாரதி கண்ட
புதுமைப் பெண்ணாய்ப்
புதிதாய் நீயும் பிறப்பெடு!