அவள் ஒரு எதிர்மறை

மழையை ரசித்தேன் நேற்று
இன்று வரட்சியை கூட
ரசிக்கிறேன்

தென்றலை ரசித்தேன் நேற்று
இன்று சூறாவளியை கூட
ரசிக்கிறேன்

நதியை ரசித்தேன் நேற்று
இன்று வெள்ளத்தை கூட
ரசிக்கிறேன்

கடலை ரசித்தேன் நேற்று
இன்று சுனாமியை கூட
ரசிக்கிறேன்

ஏனெனில் அவள் ஒரு
இயற்கை அனர்த்தம் என
அவள் வார்த்தைகளில் கண்டு
கொண்டேன்

நிலவை ரசித்தேன் நேற்று
இன்று சூரியனை கூட
ரசிக்கிறேன்

பசும் இலையை ரசித்தேன் நேற்று
இன்று காய்ந்த சருகைக் கூட
ரசிக்கிறேன்

பூக்களை ரசித்தேன் நேற்று
இன்று உதிர்ந்த இதழைக் கூட
ரசிக்கிறேன்

ஏனெனில் அவள் ஒரு
உணர்வில்லாதவள் என
அவள் வார்த்தைகளில் கண்டு
கொண்டேன்

எழுதியவர் : fasrina (1-Mar-15, 12:02 pm)
Tanglish : aval oru ethirmarai
பார்வை : 109

மேலே