என் முதல் கவிதை

..."" என் முதல் கவிதை ""...

வாய்மொழிந்த உயிர்மூச்சின்
எந்தன் முதல் கவிதையே
உன் வயிற்ருக்குள் எட்டி
உதைத்தும் அதை மொல்ல
தொட்டுப்பார்த்து ரசித்தவளே !!!

உன்னுயிரை பகடையாக்கி
என்னுயிரை ஈன்றெடுக்க நீ
இன்னல் பல பட்டாலும்
எல்லாம் மறந்து பிஞ்சு
விரல்தொட்டு என் சின்ன
புன்னகையில் மகிழ்ந்தாயே !!!

உன் உதிரத்தை பாலாக்கி
உணவாக்கி இயற்கை நியதி
ஈன்றவள் உனக்காய் என்
அழுகையிலும் ஆனந்தத்திலும்
உன் மடிமீது முகம் புதைத்து !!!

செல்லமாய் ஒரு கோபம்
சின்னதாய் ஒரு சினுங்கல்
நித்தமும் செய்தே மகிழ்ந்தேன்
எல்லாம் அறிந்தும் அன்பாய் நீ
நேற்றிமுடி கோதி மெல்லிதாய்
உன்னிதழ் பதித்த ஒரு முத்தம் !!!

நான் வாய்மொழிந்த முதல் கவிதை
அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா,,,

என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன். (2-Mar-15, 10:12 am)
Tanglish : en muthal kavithai
பார்வை : 232

மேலே