காதல் கனிய உதவி செய்

என்னுள் ஊற்றெடுக்கும் காதலே ....
எப்பாடு பட்டேனும்
அவளைக் கரைத்துவிடு ...!

காதல் கசக்குமென்ற
அவளின் எண்ணத்தை
தவிடு பொடியாக்கிவிடு ...!

காதல் திகட்டாத
தெள்ளமுதென்று
அவளுக்குக் காட்டிவிடு ...!!

கொளுத்தும் வேனலின்
குளிர்தருவின் நிழலே
காதலெனச் சொல்லிவிடு ...!!

இதமான தென்றலின்
இனிதுணர் இன்பமே
காதலெனத் தெரிவித்திடு ...!!

காதலென்றால்
காததூரம் ஓடுமவளை
என்னருகில் சேர்த்துவிடு...!!

காதலென்ற ஒற்றைச்சொல்
கேட்டாலே செவிபொத்தும்
மடமையை மாற்றிவிடு ....!!

மருளுமவள் காந்தநயனங்களை
என்னிரும்பு விழிகளாலீர்த்திட
அவள்நோக்கை என்புறம்திருப்பி
காதல்மலர உதவிசெய் ....!!!

எழுதியவர் : ராஜ லட்சுமி (2-Mar-15, 11:12 am)
சேர்த்தது : rajipappa
பார்வை : 165

மேலே