காதல் பரிசு
தேக தழுவலிலே
காமம் கரைந்தோடும்
காதல் வேண்டாமே!
விழியின் பார்வைக்குள்
அழகை அளந்துக்கொள்ளும்
ஆய்வும் வேண்டாமே!
நேரம் தெரியாமல்
ஆசை வார்த்தைகளால்
பேசும் அவலம் வேண்டாமே!
கனவு கோட்டைக்குள்
வேட்டை அரங்கேறும்
வேலையும் வேண்டாமே!
பெற்ற வயிரினை
பற்ற வைத்து நாம்
கரம் சேர வேண்டாமே!
எங்கே நீ வாழ்ந்தாலும்
உன் ஒற்றை நிமிடத்தில்
எனை பற்றி நினைக்கும்
சின்ன நினைவுக்குள் நான்
வாழும் அந்த காதல் போதுமே!
வேறென்ன உன்னிடத்தில்
நான் கேட்பேன்-நீ எனை
பிரிந்து செல்கையிலே
என் காதல் பரிசாக!