உழுதொழிலை நம்பியவளின் புலம்பல் - உதயா

கத்திரி வெயிலிலும்
கம்மாய் நெறைஞ்சியிருக்கும்
சூரியனெ இங்குவந்து
சூட்ட தனிச்சிதா போவானடி

ஆடி மாசம் காத்தலையும்
ஆறு குளம் வழிஞ்சியிருக்கும்
ஆண்டவே இங்கு வந்து
ஆனந்தமா குளிப்பானடி

ஐப்பசி மாசமெல்லாம்
ஆலங்கட்டி மழைபெய்யும்
கண்ணுக்கே தெரியா ஜீவன்கூட
கைதட்டி சிரிக்குமடி

தைமாசம் ஊரெல்லாம்
தாளம் தட்டி நெல்லருத்தா
அந்த பெருமாளே இங்கவந்து
தொண்ட முட்ட திண்பானடி

அந்த காலமெல்லாம்
எங்கபோச்சி
எங்க காலமெல்லாம்
எங்கபொச்சி

நீர்வழிஞ்ச காடெல்லாம்
காய்ஞ்ச மண்வழிஞ்சி
கெடக்குதையா

ஆடி மாசம் காத்துலதான்
மண்ணும் பறந்து வேற தேசம்தான்
போகுதையா

ஆலங்கட்டி மழைகுக்கூட
வம்சம் அழிஞ்சிதா
போச்சியையா

ஆறு கொளத்துலயெல்லாம்
தவள நண்டும் கருவாடா
கெடக்குதையா

அந்த பச்ச நிறம்
பயிரெல்லாம் தூக்குலதா
தொங்குதையா

இந்த வக்கத்த சிரிக்கிமட்டும்
வாழ வேற வழிதெறியாம
பொலம்புறையா

எழுதியவர் : udayakumar (2-Mar-15, 9:48 pm)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 74

மேலே