மூழ்கிப்போனேன்…
காதல் மழையில்.
மூழ்கடித்தவளே…..
உன் காந்த சிரிப்பில்
என்னை சிறைகொண்டவளே..
உன் தேன் சொட்டும் பேச்சால்
ஆயுள் கைதியாக
நிற்கின்றேன்…
என் கவிதைகளுக்கு
உயிர் கொடுத்தவளே…
நீயின்றி….
நடைபிணமாவேன்
உன் நினைவுகளில்
முக்கி எழமுடியாமல்
மூச்சு திணறுகிறேன்….