கிளி ஜோசியம்

துண்டு சீட்டினை
கவ்வி கொடுத்துவிட்டு
கூண்டுக்குள் சென்றதும்
கீ கீயென்று
சத்தமாக சிரித்தது
பச்சைக்கிளி

என் விடுதலை தினமே
தெரியாத தன்னிடம்
எதிர்காலத்தை
கேட்டுவந்திருக்கும்
மனிதர்களை நினைத்து!

.......................................................

நீங்கள் என்னிடம்
எதிர்காலம் பார்க்கும்
ஒவ்வொரு முறையும்
என் எதிர்காலம்
சற்று மாறுகிறது
சிறையில் இருந்து
சிறிதுநேர விடுதலை !

......................................................

நீங்கள் அளிக்கும்
பணத்தை விட
அதிக பழத்தை தருகிறேன்
நீங்கள் என் எதிர்காலத்தை
சொல்ல முடியுமா?
சிறகுகளை விரித்து
பறக்க போகும் நாள்
எதுவென்று !
...........................................................
என் எதிர்காலத்தை
அழித்தது தெரியாமல்
நான் மற்றவர் எதிர்காலத்தை
உண்மையாய் அளிக்கிரேணாம்
கனைக்கிறார் கிளி ஜோசியர்!
............................................................

அழகாய் பிறந்ததர்க்கோ
இந்த ஆயுள் சிறைச்சாலை

இறைவா
பேசும் ஆற்றல்
எங்கள் இனத்திற்கு வேண்டாம்

பொய் பேசி கற்று கொடுத்தே
எங்களையும்
மனிதர் பட்டியலில்
சேர்த்துவிடுவார்கள்
நாங்கள்
நாங்களாகவே வாழ்கிறோமே !

......................................................


இதனை எழுத தூண்டிய நண்பர் மூர்த்தி அவர்களுக்கு நன்றி

எழுதியவர் : கவிபுத்திரன் (3-Mar-15, 7:17 am)
Tanglish : kili josiyam
பார்வை : 616

மேலே