நித்தியம் நோக்கி
தடுத்தாட்கொள் இறைவா
என வேண்டியே
பந்தங்களின் வேரறுத்து
முக்தி வேண்டி
மூச்சடக்கி வடக்கு
நோக்கி அமர்ந்து
நிட்டை கைகூட
நினைவினில் பிள்ளை
பிராயமுதல் அத்தனையும்
வரிசைகட்டி வந்து
போனதிலே இருப்போம்
என்றும் என்றே
புரிந்த காரியங்கள்
பேசிய பேச்சுகள்
சிரித்திடும் நேரமிது
பொய்யுலகம் தனைவிடுத்து
பேரானந்த கடலில்சேர
பெரியவனின் அழைப்பதுவும்
வந்திட்ட நேரமிதில்
இருளில் ஒளியொன்று
போதமாய் விளங்க
வருகிறேன் ஏற்றுக்கொள்
மறுபிறவி வேண்டிலேன்
என்று முழங்கிடவே
முதலோன் கைநீட்ட
புறப்படுவேன் நிலம்விட்டு
இங்கே நித்தியம் எதுவுமில்லை
இனி சத்தியம் துன்பமில்லை!
மாயா..மாயோன்..
மா..மருந்தே
மலையோனே ..
மலைத்தேனே
மலை..தேனே!
மகிழ்ந்தேனே!