சில்மிஷகார என் கனவு காதலன்

இரவில் மட்டும் வருகின்றான்
இடைவருடி நகைக்கின்றான்
விழி மூடி உறங்கிடேல்
விடியும் வரை விழிக்கின்றான்

கண்ணே மணியே என
கவிஞன் போல் பொய்யுரைத்து
காதல் மழை பொழிகின்றான்
கம்பனாகி ரசிக்கின்றான்.!

மார்போடு என்னை அணைத்து
மந்திரங்கள் செய்கின்றான்
தலை வருடி முத்தமிட்டு
தாயாக மாறுகின்றான் .!!

தேனாக பேசுகின்றான்
திகட்டாமல் இனிக்கின்றான்
இரவில் மட்டும் ஏன் உயிரே
பகலிலும் வா என்றால்
பகல் கனவு மறக்கும் என்று நாசுக்காய் நழுவுகின்றான்.!!

சிறிது சிறிதாய் சேர்க்கும்
சில்லறை போல
சிதறாமல் நானும் சேமிக்கின்றேன்
தினம் அவன் கனவில் செய்யும்
சில்மிஷத்தின் நினைவுகளை ...!!!

எழுதியவர் : கயல்விழி (4-Mar-15, 7:46 am)
பார்வை : 157

மேலே