என் மகன்

சின்ன சின்ன மழலை பேசி
சித்திரம் போல் நீ அசைய

செல்ல கண்கள் நீ உருட்டி
வண்ண வண்ண ஜாலம் காட்ட

அன்னம் ஊட்டும் என் கைகளுக்குள்
இன்பமாய் நீ தவள

பேரின்பம் இதுவென்றே
கண்டதடா என் உள்ளம்
முக்திதனை நான் காண
கடவுளாய் என்னுள் வந்தவனே

கடவுளுக்கு நிகராய்
அன்னை என உலகம் சொல்லும் !

ஆனால்,

என்னை அம்மா என்றழைக்க
என் குல தெய்வம் பிறந்ததிங்கே !

நான் வணங்கும் என் பெரிய சாமி
என் வயிற்றில் வந்துதிக்க
என்ன தவம் நான் செய்தேன் ?

என்ன துன்பம் வந்தாலும்
அவர் இருக்கார் காப்பாற்ற
என்று நான் எண்ணி
நித்தம் வாழ்ந்திருந்தேன்

என் தெய்வமாய் வந்தவனே
வாழ்க நீ பல்லாண்டு !

எழுதியவர் : SUNDARI யோகி (4-Mar-15, 4:16 pm)
Tanglish : en magan
பார்வை : 621

மேலே