நெஞ்சையும் கொய்து செல்கின்றாள் கொடியவள்

கொய்வாள் மலரை கொடியினில் பூங்கொடி
கொய்தபின் னும்நிறுத் தாமல்என் நெஞ்சையும்
கொய்துசெல் கின்றாள் கொடியவள் பார்நான்என்
செய்வேன்காற் றேநீயே சொல்

---ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

அடி எதுகை --- கொய் கொய் கொய் செய்

சீர் மோனை --1 3 ஆம் சீரில் ---கொ கொ கொ தா கொ கொ செ சொ

எழுதியவர் : கவின் சாரலன் (27-Sep-24, 9:45 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 39

மேலே