புதிய முயற்சி
வெற்றிக்கனியின் விதை
முயற்சி
தாஜ்மஹாலும் தஞ்சை கோபுரமும்
முயற்சியின் தடயங்களே
அலை
கடலின் முயற்சி
சிலை
உளியின் முயற்சி
வானவில்
நிறத்தின் முயற்சி
பௌர்ணமி
நிலவின் முயற்சி
கவிதை
சொற்களின் முயற்சி
இமயம்
கற்களின் முயற்சி
காதல்
மனதின் முயற்சி
வெற்றி
தோல்வியின் முயற்சி
இமயம் தொட்டது முயற்சியே
நிலவைதொட்டதும் முயற்சியே
அறிவியல் வளர்ச்சியெல்லாம் முயற்சியே
புயலாய் எழுவோம்
புதிதாய் முயல்வோம்