கேள்விகள்

பல ஆயிரம் கேள்விகள் என்னுள்....!

அன்புக்கு தெய்வம் என்ற பெயருண்டு அம்மா சொன்னாள்....!

அத்தெய்வத்தினை வணங்குதலில் பிரிவினை கண்டோம்...!

கோவில்களில் கூட எளியோரை ஒதுக்கி வலியோரை வணங்கினோம்...!

பரிணாமத்தின் புதுவரவு பணத்தினில் மோகம் கொண்டோம்...!

காகிதத்தில் கொண்ட பற்றினை மனிதத்தின் மேல் வைக்க தவறினோம்...!

இவ்வாறு அடுக்கடுக்காய் என்னுள் ஆயிரம் கேள்விகள்....!

விடைதேடும் பொழுதினில் "நீ மட்டும் விதிவிலக்கா" என்ற கேள்வி என்னையும் கேட்டது எனதுள்ளம்....!

எழுதியவர் : யாழினி வெங்கடேசன் (4-Mar-15, 6:57 pm)
Tanglish : kelvikal
பார்வை : 70

மேலே