கவிதை பயிற்சி
தானை சூழ வெழுத்துலகை யாண்டறிபவர் தங்கள் பாவினிதென்றே
நீநினைத்தியோ நெஞ்சமே குன்றிடா உவகையா வதுற்றால்
நாளும் நன்மையும் வந்துசீர் வழங்குமெய் வாழ்வுகாண்டலும் வீண்முற் போன நாட்கிரங்கவும்தரு மென மெய்யோர் உழன்றதோர்ந்து திலை காணே
பொருள்: பெரும் ரசிகர் கூட்டமுடன் பவனி வரும் எழுது விற்பன்னர் திறம் பெரிதென்று நினைத்து தன்னால் முடியவில்லையே என்று குமையாதே ; உற்சாகத்துடன் மொழி ஈடுபாட்டுடன் முனைந்து நீ எழுதுவதை பயிற்சியாய் ஆக்கிடவே எதிர்பார்த்த நிலை வரும் அது வரை கடந்ததை நினைத்து கலங்குதல் உண்மை உணர்வு கொண்டோர்க்கில்லை அறிந்து கொள்.
(எனக்கு தெரிந்த வகையில் எழுதினேன்;குறையிருக்கும்-பொறுத்தருள வேண்டுகிறேன் புலமை உள்ளோரை!)