காதலி காதலனுக்கு எழுதிய கடிதம்♥♥♥

காதலி காதலனுக்கு எழுதிய ் கடிதம்..

என் காதலே
நான் இங்கு நலம்
நீ அங்கு நலம் என கேட்க ஆவல்♥

என் காதலே உனக்கு
ஏன் இத்தனை கோபம்

நான் உன்னை ஏமாற்றவில்லை
நானே என்னை
ஏமாற்றிக் கொண்டேன்........


என்னால் உடைந்த
உன் இதயத்திடம்
சொல்லி விடு
இந்த பாவியின்
மன்னிப்பை............♥

என்னை திட்டி
ஏனடா உன்னை
வதைக்கிறாய்......

எல்லா காதலும்
காவியமாகது என புரிந்துகொள்....

உன்னை பிரிந்த
என்னை ஏன் மறக்க
மறுக்கிறாய்
நான் ஒன்றும் தியாகி அல்ல
உன்னை மறுத்த துரோகி.......


மரணம் வோண்டாம்
உயிரே
நாம் என்பது என்றோ
இறந்துவிட்டது
இன்று நாம் யார் யாரே.....



என்னுள் இருந்த
நீ என்றோ புதைந்து போனாய்
ஏன் என்னை மட்டும் கொல்கிறாய்
உன் இதயத்தில் உயிர் கொடுத்து....

உன் வலியை விட
என் வலி கொடுமையடா
யாருக்கும் உண்மையாக
இருக்க முடியவில்லை.........

உன்னை சுமையாக
நினைக்கவில்லை
சுகமாக தான்
சுமந்தேன்..............

காலம் தான்
காரணம்
நம் பிரிவிற்க்கு..............

என் தந்தையின்
கோபம் எங்கே
உன்னை கொன்று
விடுமோ என்று......
என் காதலை நானே
கொன்றேன்...........................

நாம் கட்டிய காதல்
கோட்டையை யாரோ
இடிப்பதற்கு
நாமே இடிகலாமேன நினைத்தேன்.....


புரிந்துகொள்
என்னால் நீ புண்படவில்லை.....
பண்பட்டு இருக்கிறாய்.......


உன் பாரட்டிற்கு
சொந்தகாரி நான்
மட்டுமே..............

இன்று உனது்
வெற்றியின் முதல் தோல்வி
நான் என்பதை மறந்துவிடாதே.....


அன்பே என அழைக்கமாட்டேன்
ஏன் என கோட்க்க துடிக்கும்
உன் இதயதிடம்
சொல்லி விடு

இன்று நான்
வேறு ஒருவரின்
தாரம் என்று..................


ஏன் இப்படி செய்தேன்
என நினைக்கிறாயா
இது இயற்கையின் சதி
பொண்மையின் விதி.....

என் மகனுக்கு
உன் பெயர் வைக்க மனம்
இல்லை..................
இருந்தும் முதல் எழுத்து
உன்னில் தொடங்கும்.......♥.

பெண்களின் மனதை போல
காதலும் ஆழமானது தான்........
அதில் சொல்லபடாத வலிகள்
தான் அதிகம்.......

நன்றி கூற கடமைப்பட்டுளேன்
எனை மறவா உயிருக்கு.............♥

உனது கடிதத்திற்காக
காத்திருப்பேன்..............♪♪♪.
எனது முதலெழுத்தின்
பிறந்த செய்தியுடன்................. ♪


(குறிப்பு:இந்த கடிதம் நான் சொல்ல
என் கணவரால் எழுதப்பட்டது)

எழுதியவர் : கவிதா தாமோதரன் (5-Mar-15, 1:00 pm)
பார்வை : 3673

மேலே