கவிதாயினி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிதாயினி
இடம்:  மதராசப்பட்டினம்
பிறந்த தேதி :  11-Sep-1993
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  01-Aug-2014
பார்த்தவர்கள்:  254
புள்ளி:  15

என்னைப் பற்றி...

கவிதைக்கு என்னை பிடிக்கும்....♥
புத்தக விரும்பி.........♥♥♥♥
என் பாரதி கண்ட புதுமை பெண்ணாக வாழ முயற்சிக்கும் பெண் நான்.....♥
என் முதல் காதல் என் அம்மா்.......

என் படைப்புகள்
கவிதாயினி செய்திகள்
கவிதாயினி - முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
கவிதாயினி - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2015 11:59 pm

நான் விரும்பிய கவிதை............

என்னை வெட்டும்
அவன் விழிகள்.......

என் விரல் வருடும்
அவன் தலைமுடி.....

என்னை பாடாய் படுத்தும்
அவன் மூச்சு காற்று......

அவன் இதழ் தெடும்
மழை துளி........

எனக்காக வாழும்
அவன் இதயம்......

என்னையே மறக்க
செய்யும் அவன்
நினைவுகள்........

இவை யாவும் நான் ரசித்த கவிதைகள்.................................♥♥♥♥

மேலும்

நானும் ரசித்தேன் நட்பே! காதலின் உணர்வுகள் எனும் கவி எழுதினேன் படித்து பாருங்கள்- 16-Mar-2015 12:03 am
கவிதாயினி - அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2015 12:06 am

...வெட்டிமுறிக்கா கணங்களிலிருந்து...

இங்கு யாருமே
மரத்தை
வெட்டுவதில்லை.

முப்பது நாளும்
இவ்வானில்
முழுநிலா.

ஜேம்ஸ் கேமருன்
காட்டாத பல காட்சிகள்
ஏராளமிங்கு.

சுத்தமான கங்கை
இங்குமட்டும்.

நதியிணைப்பு
நிறைவேற்றப்பட்ட
பகுதியிது.

பெற்றோரின்
சம்மதத்தோடு
இந்த மணமேடையில்
திருமணம்..
ஆயிசாவுக்கும்
ஆறுமுகத்திற்கும்.

பூமிவாழ் மனிதர்கள்
நுழைந்துவிடாதீர்
என்
கனவுப் பிரதேசத்தில்.
--கனா காண்பவன்

மேலும்

இதில் ஒன்றிரண்டை நிறைவேற்றியவன் என்ற முறையில் கனவுப் பிரதேசத்திற்கு விசா வாங்கிய சந்தோஷம்..கவிதையின் உயரம் கண்டபின் உறக்கமும் வருமோ? 31-Mar-2015 9:31 am
நல்ல உத்தி. எல்லோரின் ஏக்கம் 31-Mar-2015 5:40 am
இந்தக் கவிதை எழுதப்பட்ட பின்பு இதனை வாசிக்காமல் நான் அப்படியென்ன வெட்டி முறித்துக் கொண்டிருந்தேன் .? 31-Mar-2015 3:24 am
பரிசுத்தமான கனவு ! 11-Mar-2015 2:49 pm
கவிதாயினி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2015 12:05 am

எந்த
சிற்பியாலும்
வடிக்க படாத
சிற்பம்
என்
அம்மா...........................♥

மேலும்

அருமை அழகான வரிகளால் ஆழமான கருத்தை சொல்கிறது கவி தொடருங்கள் -தபால் எனும் கவி எழுதினேன் விரும்பினால் படித்து பாருங்கள்- 11-Mar-2015 1:43 pm
உண்மை நன்றாக சொன்னீர்கள் 11-Mar-2015 10:12 am
உண்மைதான் நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Mar-2015 12:22 am
கவிதாயினி - subashini.mpsi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2015 10:55 pm

அழகிய முகம்-அவள்
ஆயிரம் தேவதைக்கு சமம்.....
இளகிய மனம்..
ஈகை குணம்...
உயர்ந்த பண்பு...
ஊக்கம் தரும் பேச்சு.
எளிய உடை...
ஏக்கம் தரும் அன்பு....
இவை எல்லாம் கலந்த கலவையாய்....
இறைவன் எனக்கு தந்த வரம் ....
"என் அம்மா".....

மேலும்

நன்றி தோழி.... 10-Apr-2015 7:01 pm
நன்றி நட்பே.... 10-Apr-2015 7:00 pm
நன்றி நண்பா... நிச்சயம் படித்து பார்க்கிறேன் 07-Apr-2015 8:39 pm
சிறப்பான கவி 11-Mar-2015 10:13 am
கவிதாயினி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2015 11:13 pm

காதலும்
ஒரு தாய்
தான்....
பல
கவிஞர்களை
பெற்றேடுப்பதால்.............

மேலும்

உண்மைதான் ! 11-Mar-2015 2:52 pm
நன்று தோழமையே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Mar-2015 12:25 am
கவிதாயினி - கவிதாயினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Mar-2015 9:35 am

நிழல் அல்ல நிஜம்..........

காதலர்கள்
தான்
வேறுபடுகிறார்கள்
நிழல் போல......................
ஆனால்
காதல் என்றும் நிஜம்
வேறுபடுவதும் இல்லை
மாறுபடுவதும் இல்லை........................

மேலும்

கவிதாயினி - கவிதாயினி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2015 3:56 pm

பெண் வேட்டை.......

பெண்களை
வேட்டையாடும்
ஆண்களே............
மறந்து விடாதீர்கள்

காட்டுக்கு
ராஜா ஆனாலும்
வேட்டைக்கு
ராணி என்பதை...........

மேலும்

நன்று.. தொடருங்கள். 11-Mar-2015 12:42 am
கவிதாயினி - கீர்த்தனா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2015 9:01 pm

கண்ணாளனே!!நீ கோவம் கொள் என்மேல் அதிகமாய்.......
அப்போது தானே கொஞ்சம் திட்டும்,
கொஞ்சும் அரவணைப்பும் அடிக்கடி கிடைக்கும்......

மேலும்

நன்றிகள் நட்பே 10-Mar-2015 7:24 am
நன்றிகள் நட்பே 10-Mar-2015 7:23 am
அழகிய கவிமொழி ... 09-Mar-2015 2:29 pm
அழகு 09-Mar-2015 6:42 am
கவிதாயினி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Mar-2015 6:38 am

மகன் : "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?"
தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?"
மகன் : "1 மணி நேரத்திற்கு எவளோ சம்பாரிப்பிங்க ?"
தந்தை : "அது உனக்கு தேவை இல்லாதே விஷயம் ... நீ எதுக்கு இது எல்லாம் கேக்குறே ?"
மகன் : "சும்மா தெரிஞ்சிக்கத்தான்... சொல்லுப்பா ."
தந்தை : "உனக்கு தெரிஞ்சே ஆகணும்னா சொல்றேன் ... மணிக்கு 100 ரூபாய் சம்பாரிப்பேன் சராசரியா ..."
மகன் : "ஓ !!! (தலைகுனிந்தவாறே) .. அப்பா நா அதுல 50 ருபாய் எடுத்துக்கவா?"

தந்தைக்கு கோபம் வந்தது ...

தந்தை : "நீ இவளோ பணம் கேக்குறது ஒரு நாய் பொம்மையை வாங்கி விளையாடத்தானே ?? ஒழுங்கா போய் படுத்து தூங்கு ... நா இங்க உங்களுக்காக நாய்போல உழைக்குற

மேலும்

இதை ஏற்கனவே வேறு எங்கோ படித்த ஞாபகம். தந்தையின் பாசத்தை விலைக்கு வாங்கும் மகன்.. அதிலுள்ள் உறவின் புனித சூட்சம்.. மிக அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி 10-Mar-2015 1:09 am
கவிதாயினி - உமை அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2015 10:45 pm

பிடிக்காத தாமரை
ஆட்சிதண்ணிரில்
எங்களுக்கு பிடித்த
தாமரைகண்ணீரில்..
இந்த ஒற்றைத் தாமரைக்கு குரல் கொடுக்க உலகில் எத்தனை தாமரைகள் உள்ளன

மேலும்

உங்கள் அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். கண்ணால் காண்பதுவும் பொய்; காதால் கேட்பதுவும் பொய்; தீர விசாரித்து அறிவதே மெய். நீங்கள் பெண்ணின் சார்பாகப் பேசுகிறீர்கள்; நான் மண்ணின் சார்பாகப் பேசுகிறேன். நன்றி! 09-Mar-2015 4:09 pm
தாமரை ஒரு பொறியியல் பட்டதாரி தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக அவர் தம் துறையை விட்டு தமிழ் பணியை தொடர முடிவு எடுத்துக் கொண்டார் அவரது அறிக்கை இவ்வாறு கூறுகிறது ...நான் கனவு கண்ட தமிழ்த் தேசம் அறம், ஒழுக்கம், நேர்மை, உண்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. அதற்காகத்தான் இத்தனை ஆண்டு காலம் உறக்கமின்றி உழைத்திருக்கிறேன். இப்போது அதற்கு ஊறு நேர்ந்திருப்பதாகக் கருதுகிறேன். 06-Mar-2015 8:10 pm
1. //சம்பந்தப்பட்ட பெண், பெற்றோர் தனக்குப் பார்த்துச் செய்வித்த முதல் திருமணத்தை முறித்துவிட்டு, அந்தக் கணவரையும் வேண்டாம் என்று வெட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தவர். // இந்தக் கூறு முற்றிலும் தவறு தினத்தந்திக்கு அளித்த பேட்டி ஒன்றி தாமரை தனது முதல் திருமணம் பற்றி... "1990-ம் ஆண்டு எனக்கு முதல் திருமணம் நடந்தது. கணவர் வேறு பெண்ணை திருமணம் செய்து, என்னிடம் முறைப்படி விவாகரத்து பெற்று சென்றுவிட்டார்" 2. //இன்னொருவரைத் திருமணம் செய்துவிட்டால், இல்லற தர்மத்தை நிலைநிறுத்தும் பொறுப்பு உங்களுக்கு வந்துவிடுகிறது. // நிச்சயமாக ....இந்த இல்லற தர்மம் ஏன் தியாகுவிற்கு வரக் கூடாது ஒரு குழந்தைக்கு தகப்பன் அந்தக் குழந்தையின் நலன் எதிர்காலம் பற்றி எந்தச் சிந்தனையும் இன்றி நாட்டுப் பற்று தனி மனித உரிமை என்று உளறித் திரிவது ஓடி ஒளிவது ஈற்றில் தன குழந்தையிடம் மன்னிப்புக் கேட்பது ஒரு பொறுப்புள்ள தகப்பனுக்கு உள்ள தகுதியா?? 3.//ஊருக்கு எப்படியும் இருந்துவிட்டுப் போ; எனக்கு உண்மையாய் இருந்தால் சரிதான்' என்ற ரீதியில்தானே குடும்பக் கட்டுக் கோப்பைக் குலையாமல் காப்பாற்றி வருகின்றனர்? உங்களுக்கும் அப்படிக் காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறதுதானே? // என்ன சார் இது நியாயம் ....அப்படி என்றால் இரண்டு முகம் கொண்ட இந்தப் போலி ஆசாமிகளுக்கு வாழ்க்கைப் பட்டு போலியாக வாழ்ந்து போலிச் சமுதாயத்தை உருவாக வேண்டுமா ...புரியவில்லை ?? 4. இறுதியாக சினிமாவிற்காக பாடல் எழுதுகிறார் என்பதற்காக ஓர் நடிகையின் கதையை இவ் இடத்தில் கொண்டு வருவது தவறு..... 06-Mar-2015 8:05 pm
அடுத்தவர்களின் குடும்பப் பிரச்னைக்குள் அளவிற்கு மீறி மூக்கை நுழைப்பது அழகல்ல. இருப்பினும், நான்கு சுவர்களுக்குள் இருக்க வேண்டியது நடுத்தெருவிற்கு வந்துவிட்டால், நான்கு பேர் நான்கு விதமாகப் பேசத்தான் செய்வர். எந்தப் பிரச்னையையும் அதன் வேரிலிருந்து பார்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட பெண், பெற்றோர் தனக்குப் பார்த்துச் செய்வித்த முதல் திருமணத்தை முறித்துவிட்டு, அந்தக் கணவரையும் வேண்டாம் என்று வெட்டிவிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தவர். பின், தனக்குப் பொருத்தமானவர் என்று ஒரு நபரைத் தானே தேர்ந்தெடுத்துத் திருமணம் செய்து பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டவர். இவ்வளவு காலம் கழித்து இப்பொழுது, அவரும் சரியில்லை துரோகி என்றால், உங்கள் முதல் கணவருக்கு நீங்கள் செய்ததன் பெயர் என்ன? உங்கள் பெற்றோருக்கு நீங்கள் செய்ததன் பெயர் என்ன? .... அப்பொழுது நீங்கள் செய்தது புரட்சி! ... இப்பொழுது வறட்சியா? தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்! உங்களுக்குக் கொள்கை, மார்க்கம்தான் பெரியது, அதில் சமரசத்திற்கே இடமில்லை என்றால், நீங்கள் கொளகைகளைத்தான் திருமணம் செய்திருக்க வேண்டும். ஆனால் இன்னொருவரைத் திருமணம் செய்துவிட்டால், இல்லற தர்மத்தை நிலைநிறுத்தும் பொறுப்பு உங்களுக்கு வந்துவிடுகிறது. உங்கள் கணவருக்காக, பிள்ளைகளுக்காக, சமூகத்திற்காக நீங்கள் வளைந்து கொடுத்து, விட்டுக் கொடுத்து, ஏன், பலவற்றைத் தியாகம் செய்து கூட அதைக் காப்பாற்றும் நிலைக்கு வந்துவிடுகிறீர்கள். இது, ஆண்-பெண் இருவருக்குமே பொருந்தும். நீங்கள் சினிமா துறையில் இருப்பவர். உங்களுக்குத் தெரியாமல் போகுமா? சினிமாவில் காசுக்காக அம்மணமாகக் கூட காட்டுவர்; ஆனால் தங்கள் வீட்டில் பெண்களைப் பர்தா போட்டு மூடாத குறையாக முழுக்க மூடியிருப்பர். கொள்கைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் உள்ள வேறுபாடு இதுதான். தாம் நாத்திகம் பேசுவர்; தம் வீட்டுப் பெண்களைக் கோவில் குளம் சுற்றிவர அனுமதிப்பர். தாம் இந்தி ஒழிக என்பர்; தம் வாரிசுகளை அதைத்தான் படிக்கச் சொல்வர்; தாம் மேடையில் உண்மை, நேர்மை என்பர்; ஆனால் உள்ளே ஊழலும் திருட்டும் செய்வர். இவர்களை மணந்த பெண்களெல்லாம் வாழ வில்லையா? 'ஊருக்கு எப்படியும் இருந்துவிட்டுப் போ; எனக்கு உண்மையாய் இருந்தால் சரிதான்' என்ற ரீதியில்தானே குடும்பக் கட்டுக் கோப்பைக் குலையாமல் காப்பாற்றி வருகின்றனர்? உங்களுக்கும் அப்படிக் காப்பாற்றும் பொறுப்பு இருக்கிறதுதானே? உங்களுடைய பேச்சோ, நடவடிக்கையோ ஏதோ ஒன்று பிடிக்காமல்தான், இவ்வளவு காலமும் உங்களுடன் ஒற்றுமையாய் இருந்தவர் இப்பொழுது விலகிச் செல்கிறார். இனிச் சேர மாட்டார் என்பது உறுதியானதும், ஆத்திரம் கொண்டு அவர் மீது சேற்றை வாரி இறைக்கிறீர்கள். உங்கள் தவறை மறைக்க, மக்கள் அனுதாபத்தைப் பெறப், பெண்ணிற்கே உரிய உத்திகளைக் கையாளுகிறீர்கள். உங்களை மட்டும் அவர் விட்டு விலகாமல் இருந்திருந்தால், அவரது இரட்டை வேடத்தை நீங்களும் சகித்துத்தான் போயிருப்பீர்கள். இதுவே என் மனம் சொல்வது. நான் சொல்வது பொதுவாக தொன்னூற்றொன்பது சதவீதம் சரியாகத்தான் இருக்கும்; அதே நேரம், எல்லாரும் சொல்லும் வெகுஜன அபிப்பிராயத்திலிருந்து தொன்னூற்றொன்பது சதவீதம் தவறாகவே இருக்கும். இதேபோல் இன்னொரு கேஸ். அந்த நடிகைக்கு நாக்கில் சனி. மேடையில் எதையாவது பேசிவிட்டு நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்வார்; கோர்ட், கேஸ் என்று அலைவார். இந்தப் பிரச்னையில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு மாநிலக் கட்சியில் தஞ்சம் புகுந்தார். சுய மரியாதையைக் காக்க உதித்த அக் கட்சியிலோ தன்னுடைய சுய மரியாதைக்கே பங்கம் வருவதை உணர்ந்தார். உடனே ஓடிப்போய் இன்னொரு தேசியக் கட்சியில் இணைந்தார். இங்கேயும் நாக்கிலுள்ள சனி நன்றாக வேலை செய்தது. நாடெங்கும் நடிகைக்கு எதிர்ப்புக் கிளம்பியது. நடிகையின் கணவர் வெறுத்துப் போனார். இப்போது அவர் மணவிலக்கிற்காக வக்கீல்களை நாடியுள்ளார் என்பதும், இருவருக்கும் வேண்டியவர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் சமீபத்திய செய்தி. இது பலிக்காவிட்டால், இந்த நடிகையும் தன் இமேஜை வைத்து இந்த நடிகரை நார் நாராகக் கிழித்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. 06-Mar-2015 10:50 am
கவிதாயினி - கவிதாயினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Mar-2015 1:00 pm

காதலி காதலனுக்கு எழுதிய ் கடிதம்..

என் காதலே
நான் இங்கு நலம்
நீ அங்கு நலம் என கேட்க ஆவல்♥

என் காதலே உனக்கு
ஏன் இத்தனை கோபம்

நான் உன்னை ஏமாற்றவில்லை
நானே என்னை
ஏமாற்றிக் கொண்டேன்........


என்னால் உடைந்த
உன் இதயத்திடம்
சொல்லி விடு
இந்த பாவியின்
மன்னிப்பை............♥

என்னை திட்டி
ஏனடா உன்னை
வதைக்கிறாய்......

எல்லா காதலும்
காவியமாகது என புரிந்துகொள்....

உன்னை பிரிந்த
என்னை ஏன் மறக்க
மறுக்கிறாய்
நான் ஒன்றும் தியாகி அல்ல
உன்னை மறுத்த துரோகி.......


மரணம் வோண்டாம்
உயிரே
நாம் என்பது என்றோ
இறந்துவிட்டது
இன்று நாம் யார் ய

மேலும்

ஒரு நல்ல காதல் இதுவும் செய்யும் - அருமை 19-May-2015 4:13 pm
♥நன்றி கீர்த்தி.........♥ 05-Mar-2015 1:27 pm
Arumai arumai 05-Mar-2015 1:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
Ravisrm

Ravisrm

Chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (11)

Ravisrm

Ravisrm

Chennai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே