பொதுத்தேர்வுப் போர்வாள்கள்

இரவு
பகல் பாராது
கண்விழித்துப்படித்து
கதிரவன் எழுமின் னெழுந்து
மீண்டும் பக்கங்களை
உலாவி விட்டு

புத்துணர்வோடு
இலக்கை நோக்கிய
இலாகாவில் முத்திரை
பொறிக்கப் புறப்படும்

சீருடையணிந்த
சிப்பாய்கள்-அவர்கள்
சிங்கநடைபோடும் சில்வண்டுகள்...

வீட்டின் பாரம் சுமந்து
நாட்டின் வீரக்கொடியாகச்
சிறகடிப்பவர்கள்...

எழுதியவர் : திருமூர்த்தி. v (5-Mar-15, 5:58 pm)
பார்வை : 110

மேலே